Published : 06 Oct 2022 06:07 AM
Last Updated : 06 Oct 2022 06:07 AM

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா – தென் ஆப்பிரிக்கா மோதல்

மழை காரணமாக தார்பாயால் மூடப்பட்டுள்ள லக்னோ மைதானம்.

லக்னோ: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. டி 20 தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் லக்னோவில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, மொகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் டி 20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியா செல்ல உள்ளதால் இவர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்கவில்லை.

இதனால் ஷிகர் தவண் தலைமையிலான புதிய தோற்றம் கொண்ட இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்திய அணியில் இளம் அறிமுக வீரர்களான முகேஷ் குமார், ரஜத் பட்டிதார் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் மாற்று வீரர்களாக இடம் பெறுள்ள ஸ்ரேயஸ் ஐயர், தீபக் சாஹர், ரவி பிஷ்னோய் உள்ளிட்டோரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாட உள்ளனர். இதில் ஸ்ரேயஸ் ஐயர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷிகர் தவணுடன் ஷுப்மன் கில்தொடக்க வீரராக களமிறங்கக்கூடும். ராகுல் திரிபாதி, அல்லது ரஜத் பட்டிதார் அறிமுக வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது.

நடுவரிசை பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். சுழற்பந்து வீச்சில் ஷாபாஷ் அகமது, ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் ஆகியோர் தென் ஆப்பிரிக்க பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி கொடுக்க ஆயத்தமாக உள்ளனர். வேகப்பந்து வீச்சு துறையில் ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், அவேஷ்கான், மொகமது சிராஜ் ஆகியோருடன் அறிமுக வீரராக முகேஷ் குமார் இடம் பெற்றுள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பை பெறும்வகையில், இளம் வீரர்களுக்கு இந்தத் தொடர் பெரிய வாய்ப்பாக அமையக்கூடும்.

அதேவேளையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஏனெனில் அடுத்த ஆண்டு நடைபெற 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறுவதற்கு தேவையான கணிசமான புள்ளிகளை தென் ஆப்பிரிக்க அணி பெற்றாக வேண்டும். அந்த அணியின் பேட்டிங்கில் குயிண்டன் டி காக், தெம்பா பவுமா, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், ரீசா ஹெண்ட்ரிக்ஸ், ஜான்மேன் மாலன் பலம் சேர்க்கக்கூடியவர்களாக இருக்கின்றனர். பந்து வீச்சில் லுங்கிநிகிடி, ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, பார்னெல், பிரிட்டோரியஸ் ஆகியோர் நெருக்கடி தரக்கூடும். இதற்கிடையே இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x