Last Updated : 15 Nov, 2016 10:16 AM

 

Published : 15 Nov 2016 10:16 AM
Last Updated : 15 Nov 2016 10:16 AM

ஆசிய பசிபிக் மிடில்வெயிட் சாம்பியன் பட்டம்: செகாவுடன் மோதுகிறார் விஜேந்தர்

ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ளும் ஆட்டத்தில் இந்தியாவின் விஜேந்தர் சிங், தான்சானியா நாட்டை சேர்ந்த முன்னாள் உலக சாம்பியனான பிரான்சிஸ் செகாவுடன் அடுத்த மாதம் 17-ம் தேதி மோதுகிறார். இந்த ஆட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.

34 வயதான செகா 43 போட்டி களில் 32-ல் வெற்றி பெற்றுள்ளார். இதில் 17 நாக் அவுட் வெற்றிகளும் அடங்கும். 16 வருட குத்துச்சண்டை வாழ்க்கையில் செகா 300 ரவுண்டு களை சந்தித்துள்ளார். டபிள்யூபிஎப் உலக முன்னாள் சாம்பியனான செகா, தற்போது கண்டங்களுக்கு இடையேயான சூப்பர் மிடில்வெயிட் சாம்பியனா கவும் உள்ளார்.

விஜேந்தர் சிங் இதுவரை மோதிய 7 போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காமல் வெற்றி நாயகனாக வலம் வருகிறார். இதுவரை அவர் மோதிய எதிராளி களில் அதிக அனுபவம் கொண்ட வராக செகா உள்ளார். இதனால் இவர்கள் மோதும் போட்டி அதிக விறுவிறுப்பாக இருக்கும்.

7 போட்டிகளில் 6-ல் நாக்வுட் வெற்றி பெற்ற விஜேந்தருக்கு செகாவுடனான போட்டி மிகுந்த சவாலாக இருக்கும் என கருதப் படுகிறது. கடந்த ஜூலை மாதம் டெல்லி தியாகராஜ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்தி ரேலியாவின் கெரி ஹோப்பை வீழ்த்தி ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் பட்டத்தை விஜேந்தர் கைப்பற்றியிருந்தார்.

அந்த பட்டத்தை தக்கவைப் பதற்காக தற்போது செகாவுடன் மோத உள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x