Published : 18 Nov 2016 09:42 PM
Last Updated : 18 Nov 2016 09:42 PM

சீன ஓபன் பாட்மிண்டன்: அரை இறுதியில் பி.வி.சிந்து

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியின் அரை இறுதி சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறினார்.

சீனாவின் புஸ்ஹொவ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற 7-ம் நிலை வீராங்கனையான சிந்து கால் இறுதியில் 5-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஹி பிங்ஜியோவை எதிர்த்து விளையாடினார். இதில் சிந்து 22-20, 21-10 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

இந்த ஆட்டம் 39 நிமிடங்களில் முடிவடைந்தது. அரை இறுதியில் 6-ம் நிலை வீராங்கனையான தென் கொரியாவின் சுங் ஜி ஹியுனை எதிர்த்து விளையாடுகிறார் சிந்து. ஆடவர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் அஜெய் ஜெயராம் 15-21, 14-21 என்ற நேர் செட்டில் சீனாவின் ஷென் லாங்கிடம் தோல்வியடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x