Last Updated : 22 Oct, 2016 04:15 PM

 

Published : 22 Oct 2016 04:15 PM
Last Updated : 22 Oct 2016 04:15 PM

வெற்றியால் உயர்வாகவும், தோல்வியால் தாழ்வாகவும் நினைக்கவில்லை: டிம் சவுதி

டெல்லியில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு தோல்வி அதிர்ச்சி அளித்த நியூஸிலாந்து அணி எப்போதும் வெற்றியால் தங்களை உயர்வாகவும் தோல்வியால் தங்களை தாழ்வாகவும் நினைக்கக் கூடியதல்ல என்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி கூறியுள்ளார்.

நாளை (ஞாயிறு) 3-வது ஒருநாள் போட்டி மொஹாலியில் நடைபெறுவதையடுத்து செய்தியாளர்களிட சவுதி கூறியதாவது:

எங்கள் அணியின் பலம் என்னவெனில் வெற்றியால் உயர்வாகவோ தோல்வியால் தாழ்வாகவோ எங்களை நினைக்க மாட்டோம் என்பதே. ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் முந்தைய போட்டியின் முடிவுகளைப் பற்றி நினைக்காமல்தான் பயிற்சிகளில் ஈடுபடுவோம்.

எங்கள் தயாரிப்புகள் எப்போதும் ஒரே மாதிரிதான். இது பெரிய போட்டி என்பதை அறிவோம். இந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப விரைவில் தகவமைத்துக் கொள்வோம். டெல்லியை விட இங்கு வித்தியாசமாகவே இருக்கும் என்று கருதுகிறோம்.

ராஸ் டெய்லர் பற்றி...

துணைக்கண்டத்தில் வந்து பேட் செய்வது அவ்வளவு சுலபமல்ல, அவருக்கு டெஸ்ட் தொடர் கடினமாக அமைந்தது. ராஸ் டெய்லர் ஒரு அருமையான பேட்ஸ்மென். பல ஆண்டுகள் அவர் அதனை நிரூபித்துள்ளர். தரமான வீரரான அவர் அந்தத் தரத்தை மீண்டும் நிலைநாட்டுவதிலிருந்து அதிக தொலைவில் இல்லை. ஒரு பெரிய ஸ்கோர் அவரிடமிருந்து நிச்சயம் உண்டு என்றுதான் நினைக்கிறேன். வலைப்பயிற்சியில் கடுமையாக பயிற்சி செய்து வருகிறார்.

ஆனால் அவர் இங்கு தனது பேட்டிங் குறித்து சிறிது ஏமாற்றமடைந்துள்ளார், இது இயற்கைதான். தான் ஒரு மூத்த வீரர், ரன்களில் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கும் இருக்கத்தான் செய்யும். பெரிய ஸ்கோர் ஒன்று நிச்சயம் உண்டு.

அணியின் உற்சாகமட்டம் அபாரமாக உள்ளது. இது மிக நீளமான தொடர், இருந்தாலும் வீரர்கள் மகிழ்ச்சியுடனே உள்ளனர்.

இவ்வாறு கூறினார் டிம் சவுதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x