Published : 03 Aug 2022 05:46 PM
Last Updated : 03 Aug 2022 05:46 PM

ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தானி அணி அறிவிப்பு: ஹசன் அலி நீக்கம்

ஹசன் அலி (கோப்புப்படம்)

லாகூர்: எதிர்வரும் ஆசிய கோப்பைக்கான அணியை அறிவித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். அந்த அணியிலிருந்து ஹசன் அலி விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை 2022 தொடர் அங்கு நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரையில் இந்தத் தொடரை நடைபெறுகிறது.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை என ஆறு அணிகள் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கின்றன. ஆறாவது அணிக்கான தகுதி சுற்றில் தேர்ச்சி பெறும் அணி இந்தத் தொடரில் விளையாடும். இந்த தொடர் டி20 கிரிக்கெட் ஃபார்மெட்டில் நடைபெற உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் தகுதி பெறும் அணியும் குரூப் ‘ஏ’ சுற்று போட்டியில் விளையாடுகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தொடருக்கான அணியை அறிவித்துள்ளது.

அணி விவரம்: பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஆசிப் அலி, ஃபகார் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுப், அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷஹீன் அஃப்ரிடி, ஷாநவாஸ் தஹானி மற்றும் காதர்.

இதில் ஷஹீன் அஃப்ரிடி தொடரில் பங்கேற்பது மருத்துவ குழுதான் தீர்மானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிராக அவர் காயமடைந்தார்.

ஹசன் அலி நீக்கம்: கடந்த டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் கேட்ச் வாய்ப்பை நழுவ விட்ட ஹசன் அலி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அந்த போட்டியில் அவர் டிராப் செய்த கேட்ச் பலமாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x