Published : 30 Sep 2016 09:04 AM
Last Updated : 30 Sep 2016 09:04 AM

செய்தித்துளிகள்: லிஃப்டில் மாட்டிக்கொண்ட கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவருமான சவுரவ் கங்குலி நேற்று மைதானத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு லிப்டில் சென்றார். அப்போது 2-வது தளத்தில் திடீரென லிப்ட் பழுதானது. பாதுகாப்பு வீரர்கள் விரைந்து வந்து கங்குலியை உடனடியாக லிப்டில் இருந்து பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.

**********************



ரியோ பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

**********************



18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் ஹாக்கி அரை இறுதியில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

**********************

பாகிஸ்தான்-மே.இ. தீவுகள் இடையிலான 3 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. இந்த தொடரை 3-0 என கைப்பற்றினால் மட்டுமே 2019-ம் உலகக் கோப்பை தொடரின் பிரதான சுற்றில் பாகிஸ்தான் நேரடியாக கலந்து கொள்ள முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x