Last Updated : 04 May, 2016 02:35 PM

 

Published : 04 May 2016 02:35 PM
Last Updated : 04 May 2016 02:35 PM

நாற்காலியை உதைத்த கம்பீருக்கு அபராதம்

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது கொல்கத்தா கேப்டன் கம்பீர் நாற்காலியை எட்டி உதைத்ததால் அவரது ஆட்டத்தொகையில் 15% அபராதம் விதிக்கப்பட்டது.

பெங்களூரு கேப்டன் விராட் கோலி, ஓவர்களை அவரது அணி மெதுவாக வீசியதற்காக, ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டார். ஏற்கெனவே இதே ஐபிஎல் தொடரில் மெதுவாக ஓவர்களை வீசியதற்காக ஐபிஎல் தொடரில் 12 லட்சம் அபராதம் கட்டிய விராட் கோலி தற்போது ரூ.24 லட்சத்தையும் சேர்த்து மொத்தம் 36 லட்சம் அபராதம் கட்ட நேர்ந்துள்ளது.

ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கொல்கத்தா அணி வெற்றி பெற 36 பந்துகளில் 81 ரன்கள் தேவைப்பட்டது. யூசுப் பத்தான், ஆந்த்ரே ரசல் அதிரடி ஆட்டம் ஆட, கடைசியில் சூரிய குமார் யாதவ் யூசுப் பத்தானுடன் இணைந்தார். சூரியகுமார் யாதவ் சைனமன் பவுலர் டப்ரைஸ் ஷம்சியை ஸ்வீப் ஷாட்டில் பவுண்டரி அடித்து வெற்றிக்கு அருகில் கொண்டி வந்த போது கம்பீர் வீரர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்த நாற்காலியை உதைத்து தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார், இதுதான் தற்போது அவரது பர்சிலிருந்து 15% தொகை அபராதமாக வசூலிக்கப்பட காரணமாக அமைந்த சம்பவமாகும்.

வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் போது கம்பீர் எதற்காக நாற்காலியை எட்டி உதைத்தார் என்பது பலருக்கு புரியாத புதிராகவே இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x