Published : 31 May 2022 04:07 PM
Last Updated : 31 May 2022 04:07 PM

“நான் ஆணாக இருந்திருக்கலாம்” - பிரெஞ்ச் ஓபன் களத்தில் மாதவிடாய் வலியால் கலங்கிய சீன வீராங்கனை

பாரிஸ்: மாதவிடாய் காலத்தில் ஏற்பட்ட வலி காரணமாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றோடு வெளியேறியுள்ளார் சீனாவை சேர்ந்த கின்வென் செங் (Qinwen Zheng). "நான் ஆணாக இருந்திருக்கலாம்" என ஆட்டத்திற்குப் பிறகு அவர் மிகவும் வேதனையுடன் சொல்லியிருந்தார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான நான்காவது சுற்றில் டென்னிஸ் உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக் (Iga Swiatek)-க்கு எதிராக விளையாடினார் Zheng. தல் செட் முடிந்த நிலையில் இரண்டாவது செட்டின்போது அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவ ரீதியான டைம்-அவுட் எடுத்துக் கொண்டார். இருந்தாலும் அவரால் ஆட்டத்தில் வெற்றி பெற முடியவில்லை. தோல்விக்கு பிறகு அவர் உருக்கமாக சில விஷயங்களைப் பகிர்ந்தார்.

"எனக்கு காலில் வலி இருந்தது. இருந்தாலும் எனக்கு ஏற்பட்ட வயிற்று வலியுடன் ஒப்பிடும்போது அது பெரிய வலி இல்லை. அந்த வலியுடன் என்னால் விளையாட முடியவில்லை. இது பெண்களின் விஷயம். மாதவிடாய் காலங்களில் முதல் நாள் மிகவும் கடினமானது. அதுவும் இயல்பாகவே முதல் நாளன்று எனக்கு வலி சற்று அதிகம் இருக்கும்.

டென்னிஸ் கோர்ட்டில் நான் விளையாடியபோது நான் ஆணாக இருந்திருக்கலாம் என அந்த தருணம் எண்ணினேன். அப்படி இருந்திருந்தால் இது மாதிரியான பாதிப்புகளுக்கு நான் ஆளாகி இருக்க வேண்டியதில்லை. இந்த பாதிப்பால் என்னால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. பந்தை அடிக்க முடியவில்லை, ஓட முடியவில்லை. நிச்சயம் அடுத்த முறை சிறப்பாக தயாராகி அவருக்கு எதிராக விளையாட நான் ஆவலோடு உள்ளேன்" என தெரிவித்துள்ளார் 19 வயதான அவர்.

பெல்ஜியம், ரோம் மற்றும் பிரான்ஸ் நாட்டு வீராங்கனைகளுக்கு எதிராக முதல் மூன்று சுற்றுகளில் வெற்றி பெற்றிருந்தார் அவர். இதில் மூன்றாவது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை அலிஸ் கார்னெட் வாக்-ஓவர் கொடுத்து வெளியேறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x