Published : 13 May 2022 09:21 PM
Last Updated : 13 May 2022 09:21 PM

IPL 2022 | ஜெனரேட்டர் மைதான விளக்குகளுக்கு மட்டும் தானா? பவர்-பிளேவில் பவர்-கட் குறித்து கேள்வி எழுப்பிய சேவாக்

மும்பை: "ஜெனரேட்டர் மூலம் கிடைக்கும் மின்சாரம் மைதான விளக்குகளுக்கு மட்டும் தானா?" என பவர்-பிளே ஓவர்களில் ஏற்பட்ட மின் தடை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்.

நடப்பு ஐபிஎல் சீசனின் 59-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள், வான்கடே மைதானத்தில் விளையாடின. இந்த போட்டியில் சென்னை வீரர் டெவான் கான்வே எதிர்கொண்ட முதல் பந்து அவரது பேடில் பட, LBW முறையில் அவுட் என நடுவர் அறிவித்தார். ஆனால் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் DRS முறையை கான்வே எடுக்க முடியவில்லை. ஏனெனில், மைதானத்தில் மின் தடை காரணமாக அந்த ஆப்ஷன் அவருக்கு மறுக்கப்பட்டது. அது பெரிய சர்ச்சையாக வெடித்தது.

இந்நிலையில், அது குறித்து தனது பாணியில் விமர்சித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக். "மின் தடை காரணமாக DRS முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதை முதலில் என்னால் நம்ப முடியவில்லை. இது மிகப்பெரிய லீக் தொடராகும். அதனால் அதற்கு ஒரு ஜெனரேட்டர் நிச்சயம் பயன்படுத்தி இருக்க வேண்டும். போட்டி சார்ந்த எந்தவொரு ஏற்பாடும் அதற்குரிய பேக்-அப் உடன் தயாராக இருந்திருக்க வேண்டும். இதன் தீவிரத்தன்மையை பிசிசிஐ மிகவும் உன்னிப்பாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜெனரேட்டர் மைதான விளக்குகளுக்கு மட்டும் தானா? சென்னை அணிக்கு DRS மறுக்கப்பட்டது. அதனால் அந்த போட்டியில் இரு தரப்புக்கும் DRS இல்லை என சொல்லி இருக்க வேண்டும். இங்கு மும்பை முதலில் பேட் செய்திருந்தாலும் பாதகம் அந்த அணிக்கு அமைந்திருக்கும்" என தெரிவித்துள்ளார் சேவாக். இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x