Last Updated : 17 May, 2016 09:35 AM

 

Published : 17 May 2016 09:35 AM
Last Updated : 17 May 2016 09:35 AM

14-வது பட்டம் வென்றது சானியா - ஹிங்கிஸ் ஜோடி

ரோம் நகரில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் நம்பர் ஒன் ஜோடியான இந்தியாவின் சானியா மிர்சா, ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. இந்த ஜோடி வெல்லும் 14-வது பட்டம் இதுவாகும்.

இறுதிப்போட்டியில் சானியா ஜோடி 6-1, 6-7(5), 10-3 என்ற செட்கணக்கில் போராடி ரஷ்யாவின் கேத்ரினா மகரோவா, எலினா வெஸ்னினா ஜோடியை தோற்கடித்தது. சிவப்பு நிற களிமண் தரையில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வெல்வது இதுவே முதன்முறை. இந்த ஆண்டில் களிமண் தரை ஆடுகளத்தில் நடைபெற்ற போட்டியில் இருமுறை இறுதிப்போட்டியில் சானியா ஜோடி தோல்வியை தழுவியிருந்தது.

சானியா ஜோடி இந்த ஆண்டில் வெல்லும் 5-வது பட்டம் இதுவாகும். மேலும் கடைசியாக வென்ற 3 பட்டங்களையும் எளிதாகவே இந்த ஜோடி கைப்பற்றியிருந்தது. ஆனால் இத்தாலி ஓபனில் ரஷ்ய ஜோடியின் கடும் நெருக்கடியை சமாளித்தே கோப்பையை கைப்பற்ற முடிந்தது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x