Published : 17 Apr 2022 06:08 AM
Last Updated : 17 Apr 2022 06:08 AM

IPL 2022 | கே.எல்.ராகுல் அதிரடி சதம் விளாசல் - மும்பையை வீழ்த்தியது லக்னோ அணி

சதம் விளாசிய லக்னோ வீரர் கே.எல்.ராகுல்.

மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.

மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. தனது 100-வது ஆட்டத்தில் களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் 60 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

குயிண்டன் டி காக் 24, மணீஷ் பாண்டே 38, மார்கஸ் ஸ்டாயினிஸ் 10, தீபக் ஹூடா 15, கிருணல் பாண்டியா 1 ரன் சேர்த்தனர். மும்பை அணி தரப்பில் ஜெயதேவ் உனத்கட் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 200 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இஷான் கிஷன் 13, ரோஹித் சர்மா 6, டெவால்ட் பிரெவிஸ் 31, சூர்யகுமார் யாதவ் 37, திலக் வர்மா 26, பேபியன் ஆலன் 8, கெய்ரன் பொலார்டு 25, ஜெயதேவ் உனத்கட் 14, முருகன் அஸ்வின் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

லக்னோ அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய லக்னோ அணிக்கு இது 4- வதுவெற்றியாக அமைந்தது. அந்த அணி 8 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. 6 ஆட்டங்களில் விளையாடிய உள்ள லக்னோ அணி 2 தோல்விகளை மட்டுமே பெற்றுள்ளது. அதேவேளையில் மும்பை அணி தொடர்ச்சியாக 6-வது தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை.

இன்றைய ஆட்டம்: பஞ்சாப் - ஹைதராபாத்

நேரம்: பிற்பகல் 3.30

சென்னை - குஜராத்

நேரம்: இரவு 7.30 நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x