Published : 13 Apr 2016 09:08 AM
Last Updated : 13 Apr 2016 09:08 AM

கொல்கத்தா- மும்பை இன்று மோதல்

ஐபிஎல் டி 20 தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா-மும்பை அணிகள் மோதுகின்றன. கொல் கத்தா தனது முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அதேவேளையில் நடப்பு சாம்பிய னான மும்பை முதல் ஆட்டத்தில் அறிமுக அணியான புனேவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தது.

இன்றைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் களமிறங் குவது கொல்கத்தா அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கக்கூடும். ஐபிஎல் தொடரில் நரைன் 74 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பை அணி ஈடன் கார்டனில் தான் இரு முறை இறுதிப் போட்டியை சந்தித்து பட்டம் வென்றுள்ளது. இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் இங்கிருந்து வெற்றி கணக்கை தொடங்க முயற்சிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x