Published : 04 Mar 2022 07:56 PM
Last Updated : 04 Mar 2022 07:56 PM

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே காலமானார்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே காலமானார். அவருக்கு வயது 56.

ஷேன் வார்னே தனது வில்லா இல்லத்தில் சுய நினைவின்றி கிடந்தது கண்டறியப்பட்டதாகவும், உரிய மருத்துவ உதவிகள் வழங்கியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனவும் அவரது நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் உள்ள தனது வில்லாவில் இருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்திருக்கலாம் என ஃபாக்ஸ் நியூஸ் செய்தியின் ஸ்போர்ட்ஸ் பிரிவு தகவல் வெளியிட்டுளது.

கிரிக்கெட் உலகுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக, ஷேன் வார்னேவின் மறைவுச் செய்தி அமைந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் தனது வியத்தகு சுழற்பந்துவீச்சின் மூலம் மகத்தான பல சாதனைகள படைத்தவர் ஷேன் வார்னே என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் வீரரான ஷேன் வார்னே, 1992 முதல் 2007 வரையில் 145 டெஸ்ட் போட்டிகளிலும், 194 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியவர். ஒரு நாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளையும் வீழ்த்திய வார்னே, நூற்றாண்டின் ஆகச் சிறந்த கிரிக்கெட்டர்கள் பட்டியலில் முதன்மை வகிப்பவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மகத்தான கிரிக்கெட் வீரருக்கு சமூக வலைதளங்களில் பிரபலங்களும், ரசிகர்களும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x