Published : 23 Apr 2016 09:33 AM
Last Updated : 23 Apr 2016 09:33 AM

வெளிநாட்டில் 10-வது ஐபிஎல் தொடர்

தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை காரணமாக மராட்டிய மாநிலத்தில் நடைபெற இருந்த ஐபிஎல் தொடரின் 12 ஆட்டங்களை வேறு மாநிலத்துக்கு மாற்ற மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

லோதா கமிட்டியின் பரிந்துரை களை அமல்படுத்துவதில் ஏற்பட் டுள்ள சிக்கலை எதிர்கொள்ள இருக் கும் இந்திய கிரிக்கெட் வாரியத் துக்கு ஐபிஎல் போட்டியை இட மாற்றம் செய்வதில் சிரமங்கள் எழுந் துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் 10-வது சீசன் ஐபிஎல் போட்டிகளை வெளி நாடுகளில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய கிரிக் கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் கூறும்போது, "ஐபிஎல் தொடர் பான பொது நல வழக்குகளால் பிசிசிஐ பெரிய அளவிலான நஷ் டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. விமான டிக்கெட், ஓட்டல் அறைகள் ஆகியவை ரத்து செய்யப்படுவதால் வாரியமும், ஐபிஎல் அணிகளும் கடுமையாக பாதிக்கப்படும். போட்டி ஒளிபரப் பாளர்கள் புதிய இடங்களுக்கு உபகரணங்களை கொண்டு செல்வதிலும் சிரமம் உள்ளது.

இவற்றுக்கெல்லாம் தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ளோம். விரைவில் ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு கூடும். அதில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை வெளிநாடுகளில் நடத்துவது குறித்து ஆலோசித்து சிறந்த இடங்களை தேர்வு செய்ய முடிவு எடுக்கப்படும்" என்றார்.

இதற்கு முன்னர் இரு முறை ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் நடத் தப்பட்டுள்ளது. 2009-ல் இந்தியா வில் மக்களவை தேர்தல் நடை பெற்றதால் ஐபிஎல் தொடர் தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. 2014-ல் மக்களவை தேர்தல் நடை பெற்றபோது தொடரின் முதல் 15 நாள் ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x