Last Updated : 29 Apr, 2016 09:31 AM

 

Published : 29 Apr 2016 09:31 AM
Last Updated : 29 Apr 2016 09:31 AM

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் சாய்னா

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் காலிறுதிக்கு முன்னேறி னார்.

சீனாவின் வூஹான் நகரில் நடை பெற்று வரும் இந்த போட்டியில் 8-ம் நிலை வீராங்கனையான சாய்னா, தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் நிட்ஷான் ஜிந்தாபோலை 21-14, 21-18 என்ற நேர்செட்டில் தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். சர்வதேச போட்டிகளில் நிட்ஷானை, சாய்னா வீழ்த்துவது இது 7-வது முறையாகும்.

காலிறுதி சுற்றில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சீனாவின் ஷிக்ஸியான் வாங்கை எதிர்த்து விளையாடுகிறார் சாய்னா. ஷிக்ஸியானுடன் 13 முறை மோதியுள்ள சாய்னா 6 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். கடைசியாக மோதிய இரு ஆட்டத்திலும் சாய்னா தோல்வியை சந்தித்திருந்தார்.

மற்றொரு இந்திய வீராங்கனை யான பி.வி.சிந்து 21-13, 20-22, 8-21 என்ற கணக்கில் சீன தைபேவின் டாய் சூ யங்கிடம் தோல்வியடைந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

முதல் செட்டை கைப்பற்றிய சிந்து இரண்டாவது செட்டில் 12-6 என முன்னிலை வகித்தார். ஆனால் அதன் பிறகு டாய் சூ ஆவேசமாக ஆடி 15-15 என சமநிலையை அடைய செய்தார். இதன் பின்னர் சிந்து தாக்குதல் ஆட்டத்தை சமாளித்து 20-19 என நெருங்கி வந்தார்.

ஆனால் டாய் சூ கடினமாக போராடி இந்த செட்டை 22-20 என கைப்பற்றினார். கடைசி செட்டில் சிந்துவால் நெருக்கடி கொடுக்க முடியாமல் போனது. இதனால் இந்த செட்டை 21-8 என எளிதாக கைப்பற்றிய டாய் சூ காலிறுதியில் கால்பதித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x