Last Updated : 16 Mar, 2016 09:33 AM

 

Published : 16 Mar 2016 09:33 AM
Last Updated : 16 Mar 2016 09:33 AM

மகளிர் டி 20 உலகக் கோப்பை: பாகிஸ்தான்- மேற்கிந்தியத் தீவுகள் இன்று சேப்பாக்கத்தில் மோதல்

மகளிர் டி 20 உலகக் கோப்பையின் 2வது நாளான இன்று பி பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான்-மேற்கிந்தியத் தீவுகள் மோது கின்றன. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

ஷனா மிர் தலைமையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணி போதிய பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்காமல் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது. போட்டி தொடர்பாக ஷனா கூறும்போது,

‘‘எல்லா அணிகளும் முன்னதாக வந்து சேர்ந்த நிலையில் நாங்கள் தாமதமாக வந்தாலும் கிடைத்த நேரத்தை பயன்படுத்திக்கொண் டுள்ளோம். எந்த நேரத்திலும் நாங்கள் எதிரணிக்கு ஆச்சர்யம் கொடுப்போம். எங்கள் அணியில் வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு சிறந்த கலவையாக அமைந் துள்ளது.

களத்தில் எங்களது திறமையை நிரூபிப்போம். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் மெத்தன போக்குக்கு இடமில்லை. சர்வதேச அளவில் அவர்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்’’ என்றார்.

அனுபவம் மற்றும் இளம் வீராங் கனைகள் அடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி ஸ்டெபானி டெய்லர் தலைமையில் மூன்று முறை டி 20 உலகக் கோப்பை தொடரில் அரை யிறுதிக்கு முன்னேறியுள்ளது. இம் முறை பட்டம் வெல்லும் முனைப் புடன் அந்த அணி உள்ளது.

போட்டி தொடர்பாக ஸ்டெபானி கூறும்போது,

‘‘உலகக் கோப்பை யில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். கடந்த 5 நாட்களாக நல்ல முறையில் பயிற்சிகள் மேற்கொண்டோம். இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். இதை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வோம்.

கடந்த ஆண்டு சில ஆட்டங் களில் நாங்கள் தோல்வியை சந்தித்தோம். ஆனால் இம்முறை கடினமாக உள்ள இந்த தொடரில் எதுவேண்டுமானாலும் நடைபெறக்கூடும். அரையிறு திக்கு முன்னேறுவதே எங்களது முதல் இலக்கு’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x