Published : 19 Mar 2016 07:58 AM
Last Updated : 19 Mar 2016 07:58 AM

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை: வெற்றிபெற வேண்டிய நெருக்கடியில் தோனி குழுவினர்

டி 20 உலகக் கோப்பையில் குரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

கோப்பையை வெல்லும் அணியாக கருத்தப்படும் தோனி தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் நியூஸி லாந்திடம் 47 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டது. அரையிறு திக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.

டி 20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை பாகிஸ்தான் தோற்கடித் தது. இதன் மூலம் தங்களை யாரும் எளிதில் கணிக்க முடியாது என்பதை பாகிஸ்தான் அணி மீண்டும் நிருபித்தது.

பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்கள் எங்கள் மீது அதிக அன்பு வைத்துள்ளனர் என்று கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி 32 பந்தில் 49 ரன் விளாசி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

மொகமது ஹபீஸ், அகமத் ஸெஷாத் ஆகியோரும் பார்முக்கு திரும்பி இருப்பது அணிக்கு வலுசேர்த்துள்ளது. இந்த கூட்டணி வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 68 பந்தில் 95 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தது. இவர்களுடன் ஷர்ஜீல்கான், ஷோயிப் மாலிக், உமர் அக்மல் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிப்பவர்களான உள்ளனர்.

மொகமது அமீர், மொகமது இர்பான், வஹாப் ரியாஸ் வேகப்பந்து வீச்சில் நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளனர். சுழற்பந்து வீச்சில் அப்ரீடியுடன் இமாம் வாசிம் பலம் சேர்க்கக்கூடும்.

கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடி உள்ளதால் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்பட்டு சிறப்பான ஆட்டத்தை கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்து கொடுக்கும் பட்சத்தில் விராட் கோலி, ரெய்னா, தோனி, யுவராஜ்சிங், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பதில் சிரமம் இருக்காது.

பந்து வீச்சில் ஆஷிஸ் நெஹ்ரா, ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின், ஜடேஜா, பாண்டியா ஆகியோர் கடந்த சில மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருவதால் இவர்களிடம் இருந்து மீண்டும் கட்டுக்கோப்பான பந்து வீச்சை எதிர்பார்க்கலாம்.

டி 20 உலகக் கோப்பைபோட்டியை நடத்தும் நாடு கோப்பையை வென்ற தில்லை என்ற வரலாறு உள்ள நிலையில் இன்றைய ஆட்டம் இந்திய அணியின் தலைவிதியை நிர்ணயிப்பதாக இருக்கும்.

அணிகள் விவரம்:

இந்தியா:

தோனி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், அஜிங்க்ய ரஹானே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஜஸ்ப்ரிட் பும்ரா, ஆஷிஸ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், பவன் நேகி, முகமது ஷமி.

பாகிஸ்தான்:

அப்ரீடி (கேப்டன்), மொகமது ஹபீஸ், ஷோயிப் மாலிக், மொகமது இர்பான், ஷர்ஜீல் கான், வஹாப் ரியாஸ், முகமது நவாஸ், முகம்மது சமி, காலித் லத்தீப், மொகமது அமீர், உமர் அக்மல், சர்ப்ராஸ் அகமது, இமாத் வாசிம், அன்வர் அலி, குர்ராம் மன்சூர்.

நேரம்: இரவு 7.30 இடம்: கொல்கத்தா

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தோற்றதில்லை

பாகிஸ்தான் அணி டி 20 உலகக்கோப் பையில் இதுவரை இந்தியாவை வென்றதில்லை. 2007, 2012, மற்றும் 2014-ம் ஆண்டு உலகக்கோப்பைகளில் நேருக்கு நேர் மோதி தோல்வியை சந்தித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு ராசி

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் பாகிஸ்தான் அணிக்கு ராசியானதாக அமைந்துள்ளது. அந்த அணி இங்கு இந்தியாவுக்கு எதிராக மோதிய 4 ஒருநாள் போட்டிகளிலும் வென்றுள் ளது. மேலும் தற்போது டி 20 உலகக் கோப்பையை வங்கதேசத்துக்கு எதிரான வெற்றியுடனும் தொடங்கி யுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x