Published : 26 Jun 2021 03:11 AM
Last Updated : 26 Jun 2021 03:11 AM

யூரோ கால்பந்து தொடர்; நாக்-அவுட் சுற்று இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் வேல்ஸ் - டென்மார்க் மோதல்

யூரோ கால்பந்து தொடரில் நாக்-அவுட் சுற்று போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. இரவு 9.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் வேல்ஸ் - டென்மார்க் அணிகள் மோதுகின்றன.

லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த வேல்ஸ் 3 ஆட்டங்களில் தலா ஒரு வெற்றி, டிரா, தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்திருந்தது. சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என டிராவில் முடித்திருந்த வேல்ஸ் அணி 2-வது ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் துருக்கியை வீழ்த்தியிருந்தது. கடைசி ஆட்டத்தில் இத்தாலியிடம் 1-0 என தோல்வி கண்டிருந்தது.

அதேவேளையில் ‘பி’ பிரிவில் டென்மார்க் அணி ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன் 3 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 2-வது இடம் பிடித்திருந்தது. முதல் ஆட்டத்தில் பின்லாந்திடம் 1-0 என்ற கணக்கிலும் அடுத்த ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 2-1 என்ற கணக்கிலும் டென்மார்க் தோல்வி கண்டது. இருப்பினும் கடைசி ஆட்டத்தில் ரஷ்யாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தது.

டென்மார்க் அணி கடந்த 1992-ம் ஆண்டு யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தியிருந்தது. இந்த நிகழ்வு நடந்து இன்றுடன் (26ம் தேதி) 29 வருடங்கள் ஆகிறது. தற்போது உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் டென்மார்க் அணி, வேல்ஸுக்கு எதிராக உயர்மட்ட செயல்திறனை வெளிப் படுத்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கு முனைப்பு காட்ட கூடும்.

நள்ளிரவு 12.30 மணிக்கு லண்டனின் வெம்பிலி மைதானத் தில் நடைபெறும் ஆட்டத்தில் இத்தாலி - ஆஸ்திரியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டங்கள் சோனி சிக்ஸ் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x