Last Updated : 22 Dec, 2015 03:02 PM

 

Published : 22 Dec 2015 03:02 PM
Last Updated : 22 Dec 2015 03:02 PM

2016 ஒலிம்பிக்: ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் பிரிவில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி

2016-ம் ஆண்டு நடைபெறும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி, ஜெர்மனி, நெதர்லாந்து அணிகளுடன் பி-பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் உலக ஹாக்கி லீகில் சர்தார் சிங் தலைமை இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்ற போது நெதர்லாந்து அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒலிம்பிக் ஹாக்கி பி-பிரிவில் இந்தியா, ஜெர்மனி, நெதர்லாந்து, அர்ஜெண்டீனா, கனடா, அயர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.

ஏ-பிரிவில் நம்பர் 1 ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பெல்ஜியம், நியூஸிலாந்து, ஸ்பெயின், பிரேசில் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

ரியோ ஒலிம்பிக் போட்டிகள் புதிய விதிமுறைகளின் கீழ் நடைபெறுகிறது, அதாவது இந்திய அணி அயர்லாந்து, கனடா ஆகிய அணிகளை வீழ்த்தினாலே காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்று விடலாம்.

மகளிர் இந்திய ஹாக்கி அணி பி-பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜெண்டீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய அணிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏ-பிரிவில் நெதர்லாந்து, நியூஸிலாந்து, சீனா, ஜெர்மனி, கொரியா, ஸ்பெயின் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x