Last Updated : 22 Dec, 2015 08:35 PM

 

Published : 22 Dec 2015 08:35 PM
Last Updated : 22 Dec 2015 08:35 PM

சிறந்த ஜோடியாக சானியா-ஹிங்கிஸ் தேர்வு

2015ம் ஆண்டின் சிறந்த ஜோடியாக சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடியை சர்வதேச டென்னிஸ் சங்கம் அறிவித்து, அவர்களது வெற்றிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

ஹிங்கிஸ் ஒற்றையர் பிரிவில் உலக சாம்பியனாக கடந்த 2000ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு 15 வருடங்களுக்கு பிறகு தற்போது இரட்டையர் பிரிவில் அந்த புகழை பெற்றுள்ளார். சானியா-ஹிங்கிஸ் இந்த இந்த ஆண்டில் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் அது தவிர 7 தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்றது.

அமெரிக்க ஓபனில் பட்டம் வென்ற இந்த ஜோடி அதன் பிறகு கடைசியாக நடைபெற்ற 22 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. ஆசிய நாடுகளில் நடைபெற்ற குவாங்ஸூ, வூஹான், பிஜிங், டபிள்யூடிஏ பைனல்ஸ் ஆகியவற்றில் சானியா ஜோடி சாதித்தது. இந்த ஆண்டில் சானியா ஜோடி 62 ஆட்டத்தில் விளையாடி 55ல் வெற்றி வாகை சூடியது.

சானியா கூறும்போது, "சர்வதேச டென்னிஸ் சங்கத்தின் இந்த விருது பெருமை அளிப்பதாக உள்ளது. இந்த ஆண்டு எனக்கும், ஹிங்கிஸுக்கும் சிறப்பாக அமைந்தது. நாங்கள் விளையாடி குறுகிய காலக்கட்டத்தில் இவ்வளவு சாதித்தது நம்ப முடியாததாக உள்ளது. என்னுடைய இந்த வெற்றி இந்திய வீராங்கனைகளுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

ஹிங்கிஸ் கூறும்போது, "இரட்டையர் பிரிவில் சர்வதேச டென்னிஸ் சங்கத்தின் விருதை பெறுவது பெருமையான விஷயம். இந்த சீசனில் சானியாவும் நானும் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக விளையா டினோம். 2016ம் ஆண்டிலும் இதை தொடருவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சிறந்த வீரராக முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிக்கும், பெண்கள் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்யம்ஸூம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வில்லி யம்ஸ் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்படுவது இது 6வது முறையாகும். அதே வேளையில் ஜோகோவிக் 5 முறையாக இந்த விருதை பெற உள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x