Last Updated : 02 Apr, 2021 03:11 AM

 

Published : 02 Apr 2021 03:11 AM
Last Updated : 02 Apr 2021 03:11 AM

விளையாட்டாய் சில கதைகள்: மகுடம் சூடிய இந்தியா

ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-வது முறையாக மகுடம் சூடிய நாள் ஏப்ரல் 2, 2011.

இந்திய கிரிக்கெட் அணி, முதல் முறையாக 1983-ம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு 28 ஆண்டுகள், அந்த கோப்பையை இந்தியாவால் வெல்ல முடியவில்லை. குறிப்பாக 2007-ம் ஆண்டு உலகக் கோப்பையில், முதல் சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த சமயத்தில் தோனியை கேப்டனாக கொண்டு, இளம் வீரர்கள் அதிகம் கொண்ட இந்திய அணியை உருவாக்கும் முயற்சியில் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு ஈடுபட்டது.

டிராவிட், கங்குவி, லக்ஷ்மண் போன்ற மூத்த வீரர்கள் ஓரம்கட்டப்பட்டு, ரெய்னா, விராட் கோலி, போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒருபுறம் சச்சின், சேவக் போன்ற அனுபவமிக்க மூத்த வீரர்களையும், மறுபுறம் இளம் வீரர்களையும் கொண்ட கலவையான இந்திய அணி, 2011-ல் நடந்த உலகக் கோப்பையில் ஆரம்பம் முதலே சீறிப் பாய்ந்தது.

கால் இறுதியில் ஆஸ்திரேலியாவையும், அரை இறுதியில் பாகிஸ்தானையும் துவம்சம் செய்த இந்திய அணிக்கு இறுதிப் போட்டியில் இலங்கை சவால் விடுத்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்களைக் குவித்தது. அன்றைய காலகட்டத்தில் இது வலுவான ஸ்கோராக கருதப்பட்டது.

அடுத்து ஆடிய இந்திய அணியில் சேவாக் (0), சச்சின் (18) ஆகியோர் குறைந்த ரன்களில் அவுட் ஆக, கவுதம் காம்பீரும் (97 ரன்கள்) கேப்டன் தோனியும் (91 ரன்கள்) தூண்களாய் நின்று இந்தியாவைக் காத்தனர். கவுதம் காம்பீர் இடையில் அவுட் ஆனாலும் கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த தோனி இந்தியாவைக் கரைசேர்த்து கோப்பையை வாங்கிக் கொடுத்தார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாளாக ஏப்ரல் 2 மாறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x