Published : 14 Feb 2021 03:17 AM
Last Updated : 14 Feb 2021 03:17 AM
கிரேக்கத்தில் பண்டைய காலத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியிலேயே நீளம் தாண்டும் போட்டி இருந்ததாக கூறப்படுகிறது. அக்காலத்தில் நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், தங்கள் கைகளில் கனமான பொருட்களை தூக்கிக்கொண்டு வருவார்களாம். தாங்கள் நீளம் தாண்டவேண்டிய இடம்வரை அந்த கனமான பொருட்களை கைகளில் வைத்திருப்பார்கள். நீளம் தாண்டும் நேரத்தில், தங்கள் கைகளை வீச, அந்தப் பொருட்களின் கனம் அவர்களை நீண்டதூரம் தாண்டவைக்கும். அதே நேரம் நீளம் தாண்டும்போது அந்த கனமான பொருட்களை பாதியிலேயே கீழே போட்டு விடுவார்கள். இதன்மூலம் அதிக தூரத்தை அவர்கள் எட்ட முடியும்.
1896-ம் ஆண்டில் நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய காலம் முதலே அதில் நீளம் தாண்டும் போட்டி ஒரு அங்கமாக இருந்து வருகிறது. ஆனால் நவீன ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள், முந்தைய காலத்தைப் போன்று நீளம் தாண்டும்போது எந்த கனமான பொருட்களையும் தூக்கிச் சென்றதில்லை. இப்போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளைப் பொருத்தவரை நீளம் தாண்டும் போட்டி, 6 சுற்றுகளைக் கொண்டதாக இருக்கும். இதில் முதல் 3 சுற்றுகளில் அதிக நீளம் தாண்டிய முதல் 8 வீரர்கள் மட்டும், அடுத்த 3 சுற்றுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். பின்னர் அவர்களில் இருந்து சிறந்த வீரர், வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார்.
1935-ம் ஆண்டு, அமெரிக்காவின் ஜெஸ்ஸி ஓவன்ஸ், 8.13 மீட்டர் நீளம் தாண்டினார். இது வெகு காலத்துக்கு உலக சாதனையாக இருந்தது. பிற்காலத்தில் 1960-ம் ஆண்டு, 8.90 மீட்டர் நீளம் தாண்டி பாப் பீமோன் அதை முறியடித்தார். பிற்காலத்தில் 1991-ம் ஆண்டு 8.95 மீட்டர் நீளம் தாண்டி மைக் பொவல் புதிய சாதனை படைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT