Last Updated : 04 Nov, 2015 09:07 AM

 

Published : 04 Nov 2015 09:07 AM
Last Updated : 04 Nov 2015 09:07 AM

இந்தியா 2வது இடத்துக்கு முன்னேற வாய்ப்பு

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே இடையே நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் மொகாலியில் நாளை தொடங் குகிறது.

தென்ஆப்பிரிக்கா தற்போது 125 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திலும், இந்தியா 100 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் இருக்கிறது. பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்காவை இந்தியா 4-0 என ஒயிட்வாஷ் செய்தால் இந்தியா 2-வது இடத் துக்கு முன்னேறும்.

மாறாக தென்ஆப்பிரிக்கா இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தால் தென்ஆப்பிரிக்கா 130 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கும்.

இந்தியாவுக்கு 4 புள்ளிகள் குறைந்து 96 புள்ளிகளுடன் அதே இடத்தில் நீடிக்கும். ஆஸ்திரேலியா 106 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 102 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், பாகிஸ்தான் 101 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளது. நியூஸிலாந்து 6வது இடத்திலும் உள்ளன.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x