Published : 02 Nov 2015 08:46 AM
Last Updated : 02 Nov 2015 08:46 AM
கொல்கத்தா - மும்பை அணிகளி டையே நேற்று நடந்த ஐஎஸ்எல் கால்பந்து லீக் போட்டியில் கொல்கத்தா அணி 4-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 34 மற்றும் 45-வது நிமிடங்களில் கொல்கத்தா வீரர் ஹியூம் கோல்களை அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். 71-வது நிமிடத்தில் மும்பை வீரர் பெனாசர் கோல் அடித்து கொல்கத்தாவின் முன்னிலையைக் குறைத்தார்.
இந்நிலையில் 77-வது நிமிடத்தில் பெர்னாண்டசும், 82-வது நிமிடத்தில் ஹியூமும் கோல்களை அடித்து கொல்கத்தாவுக்கு 4-1 என்ற கோல்கணக்கில் வெற்றியை தேடித்தந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT