Last Updated : 12 Jan, 2021 03:13 AM

 

Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

விளையாட்டாய் சில கதைகள்: குழந்தைகளின் காதலர்

டென்னிஸ் உலகின் இப்போதைய நம்பர் ஒன் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச். செர்பிய வீரரான இவர், இதுவரை 17 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நம்ம ஊர் டெண்டுல்கர் எப்படி சிறுவயது குழந்தையாக இருந்தபோதே கிரிக்கெட் பேட் பிடித்தாரோ, அதேபோல் 4 வயதிலேயே டென்னிஸ் ராக்கெட்டை பிடிக்க தொடங்கிவிட்டார் ஜோகோவிச். சிறுவயதில் ஜோகோவிச்சின் வீட்டைச் சுற்றி பல டென்னிஸ் பயிற்சி மையங்கள் இருந்ததால், அவருக்கு சிறு வயதிலேயே இவ்விளையாட்டின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 4 வயதிலேயே ஜோகோவிச்சுக்கு டென்னிஸ் ராக்கெட்டை வாங்கி பரிசளித்துள்ளார் அவரது தந்தை. இதன்பிறகு அவரது 6-வது வயதில் ஜெலீனா ஜெனிக் என்ற முன்னாள் டென்னிஸ் நட்சத்திரத்திடம் பயிற்சி பெற அனுப்பியுள்ளார். ஜோகோவிச்சுக்கு முன்னதாக மோனிகா செலஸுக்கு ஜெலீனா ஜெனிக் பயிற்சி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெலீனாவிடம் 6 ஆண்டுகள் பயிற்சி பெற்ற ஜோகோவிச், அதன் பிறகு ஜூனியர் டென்னிஸ் போட்டிகளிலும், பின்னர் மூத்தவர்களுக்கான டென்னிஸ் போட்டிகளிலும் வெற்றிகளைக் குவித்துள்ளார்.

டென்னிஸைப் போலவே, பல மொழிகளைப் பேசுவதிலும் ஜோகோவிச் வல்லவர். தனது தாய்மொழியான செர்பியன் மொழியைப் போலவே, ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன் மற்றும் இத்தாலிய மொழிகளையும் ஜோகோவிச் நன்றாகப் பேசுவார். டென்னிஸ் விளையாட்டில் ஜோகோவிச்சுக்கு பல ரசிகர்கள் இருந்தாலும், அவருக்கு பிடித்த டென்னிஸ் வீரர் பீட் சாம்ப்ராஸ்.

டென்னிஸ் விளையாட்டுக்கு அடுத்தபடியாக ஜோகோவிச்சுக்கு அதிகம் பிடித்த விஷயம் குழந்தைகள். 2007-ம் ஆண்டில் தொடங்கிய ‘நோவாக் ஜோகோவிச் அறக்கட்டளை’ என்ற அமைப்பின் பெயரில், போரினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை அவர் செய்து வருகிறார். ஒருமுறை டென்னிஸ் போட்டியில் வென்றபோது தனக்கு கிடைத்த மொத்த பரிசுப் பணத்தையும் அவர்களின் நலனுக்காக நன்கொடையாகக் கொடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x