Last Updated : 03 Nov, 2020 03:12 AM

 

Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM

விளையாட்டாய் சில கதைகள்: டென்னிஸ் உலகின் காதல் ஜோடி

சினிமா நட்சத்திரங்களுக்கு இடையில் மட்டுமல்ல, விளையாட்டு வீரர்கள் இடையிலும் காதல் தோன்றுவதுண்டு. அப்படி கடந்த நூற்றாண்டில் புகழ்பெற்ற காதலர்களாய் இருந்த விளையாட்டு ஜோடிதான் ஜிம்மி கானர்ஸும், கிறிஸ் எவர்ட்டும். டென்னிஸ் அரங்கில் ஆண்கள் பிரிவில் ஜிம்மி கானர்ஸும், பெண்கள் பிரிவில் கிறிஸ் எவர்ட்டும் சாதனைகளைப் படைத்துக் கொண்டிருந்த காலத்தில், 1970-களின் தொடக்கத்தில் இவர்களிடையே காதல் அரும்பியது.

தாங்கள் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் இருவரும் பகிரங்கமாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து பத்திரிகைகளுக்கு தீனி போடும் நம்பர் ஒன் காதல் ஜோடியாக இவர்கள் உருவெடுத்தனர். முக்கிய டென்னிஸ் போட்டிகளின்போதும், உல்லாசப் பயணங்களின்போதும் இந்த ஜோடியின் நடவடிக்கைகளை ஆராய்வதற்கென்றே சிறப்பு நிருபர்களை மேற்கத்திய பத்திரிகைகள் களம் இறக்கின.

இந்தச் சூழலில் ஒருநாள், தாங்கள் பிரிந்துவிட்டதாக இவர்கள் அறிவித்தனர். பிரிவுக்கான காரணம் பல ஆண்டுகளாக தெரியாமல் இருந்த நிலையில் இந்த கேள்விக்கு சமீபத்தில் பதில் அளித்துள்ளார் ஜிம்மி கானர்ஸ். “எங்கள் காதலின் அடையாளமாக கிறிஸ் எவர்ட்டின் வயிற்றில் ஒரு கரு உருவானது. அதைக் கலைக்க அவர் விரும்பினார். அதை நான் ஏற்கவில்லை. கருவைக்கலைத்ததால் நான் அவரை விட்டு விலகி னேன்” என்று கூறியுள்ளார் ஜிம்மி கானர்ஸ்.

ஜிம்மி கானர்ஸையும், தன் வயிற்றில் வளரும் குழந்தையையும் விட டென்னிஸ் விளையாட்டை கிறிஸ் அதிகம் நேசித்தி ருக்கலாம். உறவுகளால் தன் டென்னிஸ் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் அவர் கானர்ஸைப் பிரிந்திருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். காதலை இழந்த கிறிஸ், டென்னிஸில் தன் பிடியை விடவில்லை. 1975-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி, டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x