Published : 04 Oct 2020 07:45 AM
Last Updated : 04 Oct 2020 07:45 AM

படிக்காலிடம் ‘சீரியஸான’ திறமை இருக்கிறது, பிரமாதமான கண்கள் அவருக்கு: விராட் கோலி புகழாரம்

படிக்கால், கோலி.

2013-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஆர்சிபி அணி தன் முதல் 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்றதில்லை. இப்போது விராட் கோலி அணி ஐபிஎல் புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்துக்கு வந்துள்ளது. அதுவும் ஸ்மித் தலைமை ராஜஸ்தான் ராயல்ஸை அனாயசமாக தோற்கடித்ததில் ஆர்சிபியின் நம்பிக்கையும் வலுவடைந்திருக்கும்.

தேவ்தத் படிக்கால் தனது 4வது ஐபிஎல் இன்னிங்சில் 3வது அரைசதம் எடுத்து இந்திய அணியின் கதவை கோலி முன்னிலையிலேயே வலுவாகத் தட்டியுள்ளார். 45 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 63 ரன்களை படிக்கால் எடுக்க கோலி தன் பார்முக்கு மீண்டும் திரும்பினார், இலக்கு பெரிய இலக்கல்ல, அதனால் பதற்றமடையாமல் கோலி பிரமாதமாக ஆடி 53 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 72 ரன்கள் நாட் அவுட் என்று முடித்தார். 8 விக்கெட்டுகளில் ஆர்சிபி வென்றது.

முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யஜுவேந்திர சாஹலின் பந்து வீச்சில் (3/24) 105/5 என்று சரிந்து லோம்ராரின் முதிர்ச்சியனா 47 ரன்களினால் 154 ரன்களை எட்டியது.

இந்நிலையில் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

மிக முக்கியமான புள்ளிகளைப் பெற்றோம், கடந்த முறை இங்கு ஆடிய ஆட்டத்தை பின்னுக்குத் தள்ள வேண்டியுள்ளது. (70 ஆல் அவுட்). ஜோஸ் பட்லரிடம் கூறினேன் இந்த ஆட்டத்தை நான் எவ்வளவு நேசிக்கிறேனோ அவ்வளவு வெறுக்கவும் செய்கிறேன் என்று.

ஃபார்ம் இன்மையை புரிந்து கொள்ள வேண்டும், ஆனால் அணி நன்றாக ஆடும்போது, வெற்றி பெறும் போது நம் பார்மை மீட்டுக்கொள்ள அவகாசம் கிடைக்கிறது. ஐபில் தொடர் எப்பவும் வெகு விரைவில் நம் கையிலிருந்து போய் விடும், தொடக்கத்தில் தோற்க ஆரம்பித்தால், பிறகு திடீரென 8 போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிகள் இல்லை என்பது பகீரென இருக்கும்.

அதனால்தான் உத்வேகம் தொடக்கத்திலிருந்தே இருக்க வேண்டும். தேவ்தத் படிக்கால் பற்றி கூற வேண்டுமென்றால் அவரிடம் சீரியசான ஒரு திறமை இருக்கிறது என்று நான் சைமனிடம் கூறினேன். பெரிய ரீச் இருக்கிறது, பிரமாதமான கண்கள் அவருக்கு இருக்கிறது.

இடது கை வீரர், கிளீன் ஆக ஷாட்களை ஆடுகிறார், அவர் ரிஸ்க் எடுப்பது போலவே தெரியவில்லை. இந்த லெவலில் இப்படி ஒருவரை உணர்வது அரிதே. இன்று அவர் 40லிருந்து 60க்கும் மேல் ரன்கள் எடுத்தார், ஆட்டத்தை புரிந்து கொள்வதில் படிக்கால் சமர்த்தர்., என்றார் கோலி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x