Last Updated : 09 Sep, 2015 04:19 PM

 

Published : 09 Sep 2015 04:19 PM
Last Updated : 09 Sep 2015 04:19 PM

அமெரிக்க ஓபன் அரையிறுதியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி

அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் மகளிர் இரட்டையர் அரையிறுதிக்கு சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி முன்னேறியது.

தைபே ஜோடியான யங்-ஜேன் சான் மற்றும் ஹவோ சிங் சான் ஜோடியை 7-6, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தினர் சானியா-ஹிங்கிஸ் ஜோடி.

85 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் சானியா-ஹிங்கிஸ் தங்களுக்கு கிடைத்த அனைத்து பிரேக் வாய்ப்புகளையும் வெற்றியாக மாற்றினர். இருமுறை தங்கள் சர்வ்களை எதிரணி வீராங்கனைகளிடம் இழந்தனர்.

அரையிறுதியில் கடினமான இத்தாலிய ஜோடியான சார எரானி-பிளாவியா பென்னெட்டாவை சந்திக்கின்றனர்.

ஆடவர் இரட்டையர் காலிறுதியில் ரோஹன் போபன்னா, புளோரின் மெர்ஜியா ஜோடி டொமினிக் இங்லாட், ராபர்ட் லின்ஸ்டெட் ஜோடியை சந்திக்கின்றனர்.

ஆடவர் கலப்பு இரட்டையர் அரையிறுதியில் லியாண்டர் பயஸ்-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி போபன்னா, யங்-ஜேன் சான் ஜோடியை எதிர்கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x