Published : 16 Aug 2020 06:23 am

Updated : 16 Aug 2020 10:43 am

 

Published : 16 Aug 2020 06:23 AM
Last Updated : 16 Aug 2020 10:43 AM

 தான் விரும்பும் அமிதாப்பின் பாடல் வரிகள் மூலம்  கவித்துவமாக ஓய்வை அறிவித்த தோனி: பாடலில் வாழ்க்கை தத்துவ வரிகள்

dhoni-poetically-announces-his-retirement-through-the-lyrics-of-his-favorite-amitabh-bachchan-life-philosophy-in-the-song

எதிலும் வித்தியாசத்தை காட்டும் தோனி தனது ஓய்வு அறிவிப்பிலும் கவித்துவமான பாடல் வரிகளை தனது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளின் படங்களை இணைத்து காணொலியாக வெளியிட்டுள்ளார். அதில் தான் விரும்பும் அமிதாப்பின் பாடலை கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட்டின் ‘தல’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறவர் தோனி. 2004- டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முகமது கைஃப்புடன் ஜோடியாக இறங்கிய தோனி, ரன் அவுட்டானார். ஆனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் வெற்றிகரமான ஆட்டக்காரராக திகழ்ந்தார். நீண்ட சடைமுடியுடன் வித்தியாசமாக அறிமுகமான தோனியை சாதாரணமாக எல்லோரும் சாதாரணமாக பார்த்தனர்.


அதன் பின்னரும் தொடர்ந்து 7 ஆட்டங்கள் சரியாக ஆடாத அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2005 ஏப்ரலில் முதல் சதத்தை அடித்ததன் மூலம் வெற்றிப்படியில் ஏற ஆரம்பித்தார். அதில் அவர் அடித்தது 123 பந்தில் 148 ரன்கள் எடுத்தார். இது இந்திய விக்கெட் கீப்பர்களில் உச்சப்பட்ச வேகமான சதம் ஆகும், உலக அளவில் 4 வது இடமாகும்.

தோனி என்றால் அதிரடி என்ற என்று இந்திய ரசிகர்களால் போற்றப்பட்டவர். அவரது ஹெலிகாப்டர் ஷாட் பிரசித்திப் பெற்றது. இந்திய அணியின் கேப்டனாக சிறந்த ரெக்கார்டுகளையும், மூன்று உலக கோப்பைகளையும் பெற்றுத் தந்துள்ளார். தோனி இந்திய அணியின் ஃபிட்டஸ்ட் பிளேயர் என்று போற்றப்படுகிறார்.

கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனியின் நிதானம் பலரும் பார்த்து வியந்த ஒன்று. தோற்றாலும், கோப்பையை வென்றாலும் அவரது ரியாக்‌ஷன் ஒரே மாதிரிதான் இருக்கும். கோப்பையை வாங்கியபின்னர் இளம் ஆட்டக்காரர்கள் கையில் கொடுத்துவிட்டு ஓரமாக நின்று அவர்கள் கொண்டாட்டத்தை ரசிப்பது தோனியின் ஸ்டைல். அதேப்போன்று சிஎஸ்கே அணிக்கு அவர் தேர்வானவுடன் சென்னையின் மைந்தனாக பார்க்கப்பட்டார்.

இன்றுள்ள பல முன்னணி ஆட்டக்காரர்களான கோலி, அஷ்வின், ஜடேஜா, தவான், ரோஹித் ஷர்மா, புவனேஷ்குமார் போன்றோர் தோனி கொண்டு வந்த ஆட்டக்காரர்கள். தோனியின் ஓய்வு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் டெஸ்ட் மேட்சில் ஓய்வை அறிவித்திருந்த தோனி, நேற்று தனது ஓய்வை ஒரு காணொலியை வெளியிட்டு அறிவித்தார்.

அந்தக்காணொலியில் தோனி தனது எண்ண ஓட்டத்தை விளக்கும் வண்ணம் பல புகைப்படங்களை இணைத்துள்ளார். தோனி அவரது முதல் அறிமுக ஆட்டத்தில் ரன் அவுட் ஆனதும், கடைசியாக தான் ஆடிய 350 வது போட்டியில் ரன் அவுட் ஆன புகைப்படத்தையும் வைத்துள்ளார், உலக கோப்பையில் வென்ற தருணம், 2007 வங்கதேசத்துடன் மோசமான தோல்வியை தழுவிய போது தோனியின் புகைப்படத்தை ரசிகர்கள் எரித்த மறக்க முடியாத புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

தன்னை அறிமுகப்படுத்திய கங்குலி, தன்னை கேப்டனாக பரிந்துரைத்த சச்சின், 6 சிக்சர்கள் அடித்த யுவராஜுடன் இணைந்து ஆடிய புகைப்படம், உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 91 நாட் அவுட் எடுத்து வென்ற ஆட்டத்தின் புகைப்படம், முதல் சதம் எடுத்தது, 2007 உலக கோப்பை வென்ற புகைப்படம், ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்த புகைப்படம், கும்ப்ளே, கங்குலியின் ஓய்வு 2013- சாம்பியன் பட்டத்தை வென்றது, கங்குலியின் கடைசி ஆட்டத்தில் கேப்டன்ஷிப் வழங்கியபோது எடுத்த படம்,

ரெய்னா, விராட்கோலி, யுவராஜ் சிங்குடனான நட்புகளை கொண்டாடும் படங்கள், 2019 உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் ரன் அவுட் ஆனது, டிரஸ்ஸிங் ரூம் போட்டோ, மிலிட்டரி உடையில் உள்ள போட்டோ என பல நினைவுகளை பகிர்ந்துள்ளார். கடைசிப்போட்டோவாக வெறும் தரையில் படுத்துக்கிடக்கும் படத்துடன் காணொலி முடிகிறது.( தோனி எந்த இடத்தில் இருந்தாலும் தரையில் படுத்து உறங்கக்கூடியவர் என்று கூறுவார்கள்)

தோனி தனது ஓய்வை வெகு எளிமையாக ஒரு பாட்டின் மூலம் காணொலியில் அறிவித்துள்ளார். அது அவரது இயல்பு, அந்தப்பாடலும் அவர் மிகவும் விரும்பும் ஒரே சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் எவர்கிரீன் பாடலை ஒலிக்கச் செய்துள்ளார். அமிதாப்பை தோனி எந்த அளவுக்கு விரும்புகிறார் என்றால் தோனியின் இன்ஸ்டாகிராமில் தோனியை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை 2.74 கோடி ஆனால் அவர் பின்பற்றுவது மூன்று பேரை மட்டுமே. அதில் முதலிடம் அமிதாப்பச்சன், அடுத்து மனைவி சாக்‌ஷி, அடுத்து அவரது மகளின் பக்கம்.

அந்த அளவுக்கு அமிதாப் மீது அபரிதமான பற்று கொண்டவர். திரையுலகில் தோனிக்கு பிடித்தவர்கள் 2 பேர் ஒருவர் அமிதாப் மற்றொருவர் லதா மங்கேஷ்கர் என்று கூறியுள்ளார். அப்படிப்பட்ட அமிதாப் நடித்து 1976-ல் வெளியான மிகப்பிரபலமான ‘கபி கபி’ என்ற படத்தின் பாடலை பதிவிட்டுள்ளார்.

பிரபலமான இந்தி பாடகர் முகேஷ் பாடிய ‘மே பல் தோ பல் க ஷாயர் ஹூன்’("Main Har Ek Pal Ka Shayar Hoon") என்ற கவித்துவமான வரிகளைக்கொண்ட பாடல் பிரபலமானது. அந்தப்பாடல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்ற பாடலில் வரும் ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை’ என்கிற வரி போன்ற ஆனால் வாழ்க்கையின் எளிமையை ஒரு கவிஞன் பாடுவது போன்ற வரிகள் கொண்டது.

அதில் கவிஞன் தன்னை சாதாரண ஒரு கவிஞனாக கூறுவதும், பல கவிஞர்கள் இந்த உலகில் வந்து போயுள்ளார்கள், அவர்கள் பல கவித்துவமான வரிகளை கொடுத்துள்ளார்கள், நானும் அப்படித்தான் நான் சில நொடிகள் வாழும் கவிஞன், நான் நாளை இருக்க மாட்டேன் ஆனால் இன்று உங்களுடன் இருப்பேன் என்ற வரிகளை கொண்ட பாடல்.

பாடல் வரிகளில் உள்ள கருத்து:

“நான் ஒரு கவிஞன் , அவ்வப்போது பாடும் கவிஞன் , நான் ஒருசில நொடிகளில் வாழக்கூடிய கவிஞன், என்னுடைய கதை ஒருசில விநாடிகள் வாழக்கூடியது, என் இளமையும் ஒரு சில நொடிகளில் அடங்கும், என்னுடைய பிரபலமும் ஒரு சில நொடிகள் தான்,

எனக்கு முன் பல கவிஞர்கள் வந்தார்கள், அவர்கள் வந்து போய்விட்டார்கள். சிலர் விரக்தியில் வாழ்ந்தார்கள், சிலர் பாடல்களைப் பாடினர். அவர்களும் ஒரு சில நொடிகள் ஒரு கதையாக இருந்தார்கள், நானும் ஒருசில நொடிகள் ஒரு கதை கொண்டவன்.

நாளை நான் உங்களிடமிருந்து புறப்படுவேன், ஆனால் இன்று, நான் உங்களில் ஒரு பகுதியாக இருக்கிறேன்”. - என்ற பாடல் வரிகளை பதிவு செய்துள்ளார்.

இங்கு கவிஞர் இடத்தில் தன்னையும், பாடல்கள் இடத்தில் தனது கிரிக்கெட் சாதனைகளையும், எவ்வளவுதான் சாதனை செய்தாலும் சில நொடிகள் தான் நினைக்கப்படுவோம், சில நொடிகள் தான் வாழ்க்கை என எளிமைப்படுத்தும் எண்ணத்தில் அப்பாடலை பதிவு செய்திருக்கிறார்.
பாடல் வரிகள்:

Main pal do pal ka shaayar hoon Pal do pal meri kahaani hai Pal do pal meri hasti hai Pal do pal meri jawaani hai Mujhse pehle kitne shaayar Aaye aur aakar chale gaye Kuchh aahein bharkar laut gaye Kuchh naghme gaakar chale gaye Woh bhi ek pal ka kissa thhey Main bhi ek pal ka kissa hoon Kal tumse juda ho jaaoonga Woh aaj tumhaara hissa hoon Main pal do pal ka..

Kal aur aayenge nagmon ki, Khilti kaliya chunne waale Mujhse behtar kehne waale, Tumse behtar sunne waale Kal koi mujhko yaad kare Kyoon koi mujhko yaad kare Mashroof zamaana mere liye Kyoon waqt apna barbaad kare Main pal do pal ka..- பாடலை எழுதியவர் ஷாஹிர் லுதியாவானி

தவறவிடாதீர்!


DhoniPoetically announcesHis retirementThrough the lyricsAmitabh BachchanLife philosophySongஅமிதாப் பச்சன்கபி கபிபாடல் வரிகள்கவித்துவம்ஓய்வு அறிவிப்புதோனிபாடல்வாழ்க்கை தத்துவ வரிகள்சிஎஸ்கேசென்னை சூப்பர் கிங்க்ஸ்ராஞ்சிKabhi kabhiBCCICSK

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x