Last Updated : 05 Aug, 2020 04:34 PM

 

Published : 05 Aug 2020 04:34 PM
Last Updated : 05 Aug 2020 04:34 PM

அணியின் கேப்டனாக குறைந்தபட்ச முக்கியத்துவமே ஒருவர் தனக்குக் கொடுத்துக் கொள்ள வேண்டும்: ரோஹித் சர்மா சூசகம்

கேப்டன்சி பற்றி தனது தனித்துவமான கோட்பாடு இதுதான் என்று ரோஹித் சர்மா ஒரு கருத்தை சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் அனைவராலும் மதிக்கப்படக் கூடிய கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி 3 வடிவங்களிலும் இருப்பதால் அதிக கேப்டன்சி வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், கிடைத்த வாய்ப்பில் அணியை நன்றாக வழிநடத்திச் செல்வதாக பெயர் எடுத்தவர்.

ஐபிஎல் டைட்டில் காணாத விராட் கோலிக்கு மத்தியில் 4 ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.

இந்நிலையில் ரோஹித் சர்மா பிடிஐ செய்தி ஏஜென்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறும்போது, “நாம் கேப்டனா.. நமக்கு அதிக முக்கியத்துவம் அளித்துக் கொள்ளக் கூடாது என்ற கோட்பாட்டை நம்புபவன் நான்.

பெரிய அளவில் வைத்து யோசித்தால் மற்ற வீரர்கள்தான் முக்கியம். ஒவ்வொரு கேப்டனுக்கும் ஒவ்வொரு விதமாக இது வேலை செய்யும், ஆனால் என்னைப் பொருத்தவரை குறைந்தபட்ச முக்கியத்துவமே ஒருவர் கேப்டனாகத் தனக்கு அளித்துக் கொள்ள வேண்டும் என்பதே.

கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது சுயக்கட்டுப்பாடுடைய முயற்சி. நாம் நாமாக இருக்க வேண்டும். சில வேளைகளில் அப்படியும் கோபம் வரும், நிதானத்தை இழப்போம், ஆனால் சக வீரர்களிடத்தில் நம் கோபத்தைக் காட்டக் கூடாது. நம் உணர்வை மறைத்துக் கொள்வது முக்கியமானது” என்றார் ரோஹித் சர்மா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x