Last Updated : 08 Mar, 2020 02:49 PM

 

Published : 08 Mar 2020 02:49 PM
Last Updated : 08 Mar 2020 02:49 PM

டி20 உலகக்கோப்பை: மிட்ஷெல் ஸ்டார்க் மனைவி விளாசல்: இந்திய அணிக்கு 185 ரன்கள் இலக்கு: விக்கெட்டுகளை இழந்து திணறல்

ஆஸி. வீராங்கனை மூனே பந்தை பவுண்டரிக்கு விரட்டிய காட்சி : படம் உதவி ட்விட்டர்

மெல்போர்ன்

பெத் மூனே, அல்யஸா ஹீலே ஆகியோரின் அதிரடியான அரைசதத்தால் மெல்போர்னில் நடந்துவரும் டி20 உலகக்கோப்பைப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்துள்ளது.

185 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டக்காரர் ஷபாலி வர்மாவின் விக்கெட்டையும், ரோட்ரிஸ், மந்தனா விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறி வருகிறது.

இந்திய அணியின் கேப்டன் கவுர் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜோனாஸன்

லீக் தொடர் முழுவதும் இந்திய மகளிர் அணி 150 ரன்களுக்கு மேல் தாண்டியது இல்லை. இந்த சூழலில்184 ரன்கள் எனும் கடினமான இலக்கை விரட்டிச் செல்வது சற்று கடினமான ஒன்றுதான்.

மேலும், முக்கிய வீராங்கனைகள் ஷபாலி வர்மா, ரோட்ரிக்ஸ், மந்தனா ஆகியோர் ஆட்டமிழந்துவிட்டனர், பாட்டியா காயத்தால் வெளியேறிவிட்டார். இன்னும் கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே இருக்கின்றன.

அதிலும் கடைசி வரிசை 4 வீராங்கனைகள் பந்துவீச்சாளர்கள் என்பதால், இன்னும் இரு விக்கெட்டை இழந்தால்கூட இந்திய அணி நிலை திண்டாட்டம்தான்.



டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பெத் மூனே, அல்யஸா ஹீலே ஆகியோர் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனல் முதல் விக்கெட்டுக்கு இருவரும் 11.5 ஓவர்களில் 115 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

ஆஸ்திரேலிய ஆடவர் அணியின் வேகப்பந்துவீ்ச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க்கின் மனைவியும், விக்கெட் கீப்பருமான அல்யஸா ஹீலே அதிரடியாக ஆடி 39 பந்துகளில்75ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

4-வது ஓவரிலேயே ஹீலே, மூனே இருவரையும் ஆட்டமிழக்க வைக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை இந்திய வீராங்கனைகள் கேட்சை நழுவவிட்டனர். மூனே 41 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் லானிங்(16) ரன்னில் ஷர்மா பந்துவீச்சில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு வந்த கார்டனர் 2, ஹெயின்ஸ் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

மூனே 54 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து(10பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். காரே 5 ரன்களுடன் மூனேவுக்கு துணையாக இருந்தார்.

லீக் சுற்றில் இந்திய அணியிடம் தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தாலும், இந்த போட்டியில் அந்த தோல்விக்குப் பழிதீர்க்கும் வகையில் விளையாடி வருகிறது. அதுமட்டுமல்லாமல் 4 முறை இறுதிப்போட்டியை எட்டி இருப்பதால், அந்த அனுபவம், கடைசிக்கட்ட நெருக்கடியை சமாளித்து ஆடுவது போன்றவற்றைக் கச்சிதமாகச் செய்தனர்.

இந்தியத் தரப்பில் தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x