Published : 29 Feb 2020 06:54 AM
Last Updated : 29 Feb 2020 06:54 AM
உலகக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் பலப்பரீட்சை செய்யவுள்ளன.
ஐசிசி உலகக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குரூப்-ஏ பிரிவில் இன்று மெல்பர்னில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கையுடன் இந்திய அணி மோதவுள்ளது.
ஏற்கெனவே நடைபெற்ற 3லீக் ஆட்டங்களில் நடப்புச்சாம்பியன் ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூஸிலாந்து ஆகியஅணிகளை இந்தியா வீழ்த்திஅரை இறுதிக்கு முன்னேறிவிட்டது. எனவே இந்த லீக் ஆட்டத்திலும் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கலாம். இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையாக ஷபாலி வர்மா உருவாகியுள்ளார். இந்த
டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் 3 போட்டிகளில் 172.72 ஸ்ட்ரைக் ரேட்டில் 114 ரன்கள் குவித்துள்ளார். இது உலகக்கோப்பை சாதனை ஆகும். அவரிடமிருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸை இன்று வெளிப்படக்கூடும்.
அதே நேரத்தில் கடந்த2 லீக் ஆட்டங்களிலும் இலங்கை அணி தோல்வி கண்டு, அரை இறுதிக்குத் தகுதி பெற முடியாத நிலையில் உள்ளது.
அணி விவரம்:
இந்தியா: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), தானியா பாட்டியா, ஹர்லீன் தியோல், ராஜேஸ்வரி கெய்க்வாட், ரிச்சா கோஷ், வேதாகிருஷ்ணமூர்த்தி, ஸ்மிருதி மந்தனா, ஷிகா பாண்டே, பூனம் யாதவ், அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, தீப்த் சர்மா, பூஜா வஸ்த்ராகர், ராதா யாதவ்.
இலங்கை: சமாரி (கேப்டன்), ஹர்ஷிதா நீலாக்சி டி சில்வா, கவிஷா தில்ஹரி, அமா காஞ்சனா, ஹன்சிமா, அசினி குலசூர்யா, சுகந்திகா குமாரி, ஹசினி பெரேரா, உதேசிகா, சத்யா சந்தீபனி, அனுஷ்கா சஞ்சீவனி, சசிகலா சிறிவர்த்தனே, திலான மனோதரா, உமேஷா திமாஷினி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT