Last Updated : 29 Jan, 2020 12:21 PM

 

Published : 29 Jan 2020 12:21 PM
Last Updated : 29 Jan 2020 12:21 PM

3-வது டி20 போட்டி: டாஸ் வென்றார் வில்லியம்ஸன்; ஆடுகளம் எப்படி?

ஹேமில்டனில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்ஸன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

நியூஸிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடஉள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3-வது ஆட்டம் ஹேமில்டனில் இன்று நடக்கிறது. ஏற்கனவே நடந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையி்ல் இருக்கிறது.

ஹேமில்டனில் இன்று நடக்கும் 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதல் போட்டியில் விளையாடிய அதே இந்திய அணி வீரர்கள்தான் எந்த மாற்றமும் இல்லாமல் இந்த போட்டியிலும் விளையாடுகிறார்கள்.

நியூஸிலாந்து அணியில் டிக்னருக்கு பதிலாக குக்ஜெலிலஜன் களமிறங்குகிறார்

ஆடுகளம் எப்படி
ஹேமில்டன் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்கக்புரியாகும். பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைப்பைத் காட்டிலும் பேட்ஸ்மேன்கள்கு நன்கு ஒத்துழைக்கும். பந்துகள் பேட்ஸ்மேனை நோக்கி வேகமாக வரும் என்பதால் அடித்து விளையாடலாம். ஆடுகளத்தில் புற்கள் இருப்பதால் தொடக்கத்தில் சிறிதுநேரம் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் நன்றாக பவுன்ஸ் ஆகும். மைதானம் மிகவும் சிறியது என்பதால், சிக்ஸர், பவுண்டரி அடிப்பது எளிதாக இருக்கும்.

ஆக்லாந்து மைதானத்தைப் போல் அல்லாமல் ஹேமில்டன் மைதானம் பேட்ஸ்மேனுக்கு சொர்க்கபுரி எனலாம். இங்கு குறைந்தபட்ச ஸ்கோர் என்பதே 190 ரன்கள் என்பதால் இரு அணிகளும் ரன் வேட்டையில் இறங்கும். இந்த மைதானத்தில் கடைசியாக நியூஸிலாந்து விளையாடி 5 போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே வென்றுள்ளது. மற்ற 4 ஆட்டங்களிலும் தோற்றுள்ளது

இந்திய அணியைப் பொறுத்தவரை இந்த மைதானத்தில் கடைசியாக ஆடிய 5 போட்டிகளிலும் வென்றுள்ளது. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணியே பெரும்பாலும் வென்றுள்ளது .மகேந்திர சிங் தோனி தலைமையில் கடந்த 2008-ம் ஆண்டில் வந்தபோதும், கடந்த ஆண்டு கோலி தலைமையில் வந்தபோதும் இந்திய அணி டி20 தொடரை வெல்லாமல் சென்றதால், இந்த முறை ஆக்ரோஷமாகக் களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை 3-0 எனக் கைப்பற்றும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x