Published : 22 Jan 2020 03:44 PM
Last Updated : 22 Jan 2020 03:44 PM

இந்திய அணிக்குத் தேர்வானதைக் கொண்டாடிய பிரிதிவி ஷா, சாம்சன்: அதிரடியில் 30 ஓவர்களுக்குள் நியூஸி. ஏ-வை நொறுக்கியது இந்தியா ஏ

இந்திய அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் விதமாக இளம் வீரர்கள் பிரிதிவி ஷா, சஞ்சு சாம்சன் ஆகியோர் பிரமாதமான இன்னிங்சை ஆடியுள்ளனர்.

நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிராக லிங்கனில் நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி 20 ஓவர்கள் மீதம் வைத்து நியூஸிலாந்து அணியை 5 விக்கெடுகள் வித்தியாசத்தில் வென்றது, முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 48.3 ஓவர்களில் 230 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணியில் முகமது சிராஜ் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அக்சர் படேல், கலீல் அகமெட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். விஜய் சங்கர், ராகுல் சாஹர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இந்திய ஏ அணி 29.3 ஓவர்களில் 231/5 என்று அதிரடியாக வென்றது. இதில் தொடக்கத்தில் இறங்கிய மயங்க் அகர்வால் (29) பிரிதிவி ஷா ஜோடி 9 ஓவர்களில் 79 ரன்கள் என்ற சரவெடி தொடக்கம் கொடுத்தனர், மிகவும் ஆக்ரோஷமாக ஆடிய பிரிதிவி ஷா 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் இருவரையும் ஜேம்ஸ் நீஷம் வீழ்த்தினார். ஆனால் ஷுப்மன் கில் 35 பந்துகளில் 30 ரன்களை எடுக்க சஞ்சு சாம்சன் 21 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுட 39 ரன்களை விளாச இருவரும் சேர்ந்து 7.4 ஓவர்களில் 66 ரன்களை சேர்த்தனர். இவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆனால் சூரியகுமார் யாதவ் இறங்கி பின்னி எடுக்க 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் கிட்டத்தட்ட 200% ஸ்ட்ரைக் ரேட்டி 19 பந்துகளில் 35 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் 20 நாட் அவுட், குருணால் பாண்டியா 15 நாட் அவுட் என்று திகழ இந்தியா ஏ அணி 29.3 ஓவர்களில் 231/5 என்று வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x