Published : 21 Jan 2020 11:29 am

Updated : 21 Jan 2020 11:29 am

 

Published : 21 Jan 2020 11:29 AM
Last Updated : 21 Jan 2020 11:29 AM

இந்தியா தொடரை வெல்கிறது ஆனால் வேறொருவர் தலைப்புச் செய்தியாகிறார்: ரோஹித் ருசிகரம்

india-win-series-but-someone-else-takes-headlines-rohit-trolls

களத்தில் இறங்கினால் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு எந்த ஒரு பெரிய பவுலரையும் அனாயசமாக அடித்துத் துவம்சம் செய்யும் ஹிட் மேன் ரோஹித் சர்மாவிடம் நகைச்சுவை உணர்வு என்ற மறுபக்கம் உள்ளது.

லெக் ஸ்பின்னர் யஜுவேந்திர சாஹல் சட்டையில்லாமல் இருக்கும் புகைப்படத்தில் அவர் டாட்டூவுடன் இருப்பது ‘தி ராக்’ ஜான்சனுடன் ஒப்பிடப்பட்டிருப்பதை வைத்து ரோஹித் சர்மா, சாஹலை பகடியாடியுள்ளார்.

சாஹல், ஜான்சன் சட்டையின்றி டாட்டூவுடன் காணப்படும் படத்தை வெளியிட்டு ரோஹித் சர்மா, “இந்தியா தொடரை வெல்கிறது, ஆனால் வேறொருவர் தலைப்புச் செய்தியாகிறார், பிரமாதம் யஜுவேந்திர சாஹல்!!” என்று ட்வீட் செய்துள்ளார்.

இதற்குப் பதில் அளித்த சாஹல், “தி ராக்” என்று பதிவிட்டு நிறைய எமோஜிக்களையும் பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்போதுமே பிரமாதமாக ஆடும் ரோஹித் சர்மா பெங்களூருவில் நடைபெற்ற வாழ்வா சாவா போட்டியில் தனது 29வது ஒருநாள் சதத்தை எடுத்தார், ஆஸி.க்கு எதிராக 8வது சதம். இன்னும் ஒரு சதம் சச்சினை சமன் செய்வார். இவரது சதத்தை அடுத்தும் விராட் கோலியின் அற்புத இன்னிங்ஸினாலும் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

சாஹலுக்கு லெவனில் ஆட வாய்ப்புக் கிடைக்கா விட்டாலும் பதிலி வீரராக வியர்வை சிந்த களத்தில் பீல்ட் செய்து பங்களிப்பு செய்தார்.

நேற்று இந்திய அணி நியூஸிலாந்து பயணம் புறப்பட்டது. அங்கு வெள்ளிக்கிழமை தொடங்கும் முதல் டி20 போட்டியுடன் 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது இந்திய அணி.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


India win series but someone else takes headlines: Rohit trollsஇந்தியா தொடரை வெல்கிறது ஆனால் வேறொருவர் தலைப்புச் செய்தியாகிறார்: ரோஹித் ருசிகரம்கிரிக்கெட்இந்தியாரோஹித் சர்மாசாஹல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author