Published : 15 Jan 2020 10:26 AM
Last Updated : 15 Jan 2020 10:26 AM

இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு எழுவது ஒரு சவாலாகும்: விராட் கோலி ஒப்புதல்

மும்பையில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 255 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா பிறகு பிஞ்ச், வார்னர் சதங்களின் மூலம் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி 258/0 என்று அபார வெற்றி பெற்றது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி இது போன்ற ஒரு பெரிய உதையை வாங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்கா மும்பையில் 400க்கும் மேல் ரன்கள் குவித்து இந்திய அணியை காயவிட்டு வென்றதே அதன் பிறகான மிகவும் இழிவுபடுத்தக்கூடிய ஒரு தோல்வியை நேற்று சந்தித்தது, ஆஸ்திரேலியா இந்திய அணியை அனைத்து புலங்களிலும் ஆட்கொண்டது.

இந்நிலையில் தோல்வி குறித்து விராட் கோலி கூறியதாவது:

பேட்டிங், பீல்டிங், பவுலிங் என்று அனைத்துத் துறைகளிலும் ஆஸ்திரேலியா எங்களை வீழ்த்தி விட்டது, இது ஒரு வலுவான ஆஸ்திரேலிய அணி நன்றாக ஆடாவிட்டால் நிச்சயம் அவர்கள் நம்மை புண்படுத்தவே செய்வர். அவர்கள் பவுலிங்குக்கு சில வேளைகளில் மரியாதை கொடுத்து ஆடிவிட்டோம். ஆட்டத்தை கழுத்துப் பட்டையைப் பிடித்து எங்கள் பக்கம் இழுத்து வரவில்லை.

இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு எழுவது இன்னொரு சவால். இந்த இளம் மிடில் ஆர்டர் வீரர்கள் உலகின் இந்தத் தனித்துவமான பவுலர்களுக்கு எதிராக ஆடி தங்கள் ஆட்டத்தை வளர்த்துக் கொள்வது நல்லது, வெற்றி பெறும் இன்னிங்ஸ்களை இவர்கள் ஆட வேண்டியுள்ளது.

நான் 4ம் நிலையில் இறங்குவது பற்றி விவாதித்த பிறகே முடிவெடுத்தோம், கே.எல்.ராகுல் பேட் செய்யும் விதத்தினால் அவரை 3ம் நிலையில் அனுப்பினோம். இது குறித்தும் கொஞ்சம் மறு சிந்தனை செய்ய வேண்டியுள்ளது.

ஒவ்வொரு முறையும் வீரர்களை சில இடங்களில் இறக்கி சோதித்துப் பார்க்க வேண்டியுள்ளது. மக்கள் ரிலாக்ஸ் ஆக வேண்டும், பதற்றமடையக் கூடாது. எதுவும் சரியாக நடக்காத நாளாக இது அமைந்தது, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x