Published : 12 Jan 2020 06:48 PM
Last Updated : 12 Jan 2020 06:48 PM
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக இருப்பார். 15 வீராங்கனைகள் கொண்ட அணியில் புதுமுக வீராங்கனை ரிச்சா கோஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த அணியில் பெங்கால் பேட்ஸ்வுமன் ரிச்சா கோஷ் சேர்ப்பு மட்டுமே ஒரு புதுமுகம், மற்றபடி வழக்கமான அணியே.
இதோடு ஜனவரி 31ம் தேதி ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் தொடங்கும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுடன் இந்திய அணியும் பங்கேற்கும் முத்தரப்பு தொடருக்கான இந்திய மகளிர் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய மகளிர் அணி:
ஹர்மன்பிரித் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ரிச்சா கோஷ், தானியா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே, பூஜா வஸ்த்ராக்கர், அருந்ததி ரெட்டி.
முத்தரப்புத் தொடர் அணி:
ஹர்மன்பிரித் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ரிச்சா கோஷ், தானியா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே, பூஜா வஸ்த்ராக்கர், அருந்ததி ரெட்டி, நுசாத் பர்வீன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT