Published : 07 Jan 2020 07:49 PM
Last Updated : 07 Jan 2020 07:49 PM

மீண்டும் பிரிதிவி ஷாவுக்கு நேர்ந்த சோகம் : சோதனைக்குள்ளாகும் அதிர்ஷ்டம்

தோள்பட்டைக் காயம் காரணமாக இந்திய வளரும் தொடக்க அதிரடி வீரர் பிரிதிவி ஷா நியூஸிலாந்துக்கு எதிரான இந்தியா ஏ அணியின் 2 பயிற்சி ஆட்டங்களில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஓவர் த்ரோ ஒன்றை தடுக்கும் முயற்சியில் இடது தோள்பட்டைக் காயமடைந்தார் பிரிதிவி ஷா.

பிரிதிவி ஷா தற்பொது தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறு வாழ்வு திட்டத்தின் கண்காணிப்பில் இருக்கிறார். ஒருநாள் மற்றும் 4 நாள் போட்டிகளில் பங்கேற்பது பற்றி பிற்பாடு அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஜனவரி 10ம் தேதி அவர் இந்தியா ஏ அணியுடன் நியூஸிலாந்துக்குப் பயணித்திருக்க வேண்டும், ஆனால் தற்போது மீண்டும் அவரது அதிர்ஷ்டம் சோதனைக்குள்ளானது.

ஏற்கெனவே தெரியாமல் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதற்காக 8 மாதகாலம் தடை செய்யப்பட்டு மீண்டும் வந்து பிரமாதமாக ஆடி வந்தார், முன்னதாக எந்த ஒரு வீரரின் கனவுமான ஆஸ்திரேலியா தொடரையும் காயத்தினால் இழந்தார் பிரிதிவி ஷா.

தற்போது இந்தக் காயம். இவர் தான் காயமடையும் சந்தர்ப்பங்களைக் குறைத்தாலேயன்றி விராட் கோலி இவரை மீண்டும் அணிக்குள் அழைக்க மாட்டார் என்பது உறுதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x