Last Updated : 06 Jan, 2020 04:48 PM

 

Published : 06 Jan 2020 04:48 PM
Last Updated : 06 Jan 2020 04:48 PM

நான் ரிஷப் பந்த்திடம் இதைத்தான் கூறினேன்: உன்னைச் சுற்றி சுவரை எழுப்பிக் கொள்: ரோஹித் சர்மா

தான் டெஸ்ட் கிரிக்கெட் பற்றி யோசித்து நீண்டகாலம் ஆகிவிட்டது என்று கூறிய ரோஹித் சர்மா, விமர்சனங்கள், அறிவுரைகள் ஆகியவை இருக்கவே செய்யும் அவற்றை நம் காதில் போட்டுக் கொள்ள கூடாது என்பதே முக்கியம் என்றார்.

இந்திய அணியில் வாய்ப்புக் கிடைப்பது அரிது இதில் முழு கவனம் செலுத்துவதை விடுத்து எதற்காக பிறர் கூறுவதை நாம் பொருட்படுத்த வேண்டும் என்று இதே அறிவுரையை தான் ரிஷப் பந்த்திற்கும் கூறியதாக அவர் தெரிவித்தார்.

ரோஹித் சர்மா பிடிஐக்கு அளித்த நீண்ட நேர்காணலில் கூறியதாவது:

கிரிக்கெட் அல்லது எந்த விளையாட்டாக இருந்தாலும் நம்மைச் சுற்றி நிறைய சப்தங்கள் இருக்கும் இவை நம் கவனத்தை சிதறடிப்பதாகும். இதனைத் தடுக்க நம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் அமைத்துக் கொண்டு அது நம்மைப் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

ரிஷப் பந்த்திடம் நான் இதைத்தான் கூறினேன். 21 வயதில் அவருக்கு எவ்வளவு அழுத்தம், இறங்கும்போதெல்லாம் சதம் அடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. இதைச் செய் அதைச் செய் என்று அவருக்கு ஏராளமானோர் அறிவுரைகள்.

அதனால்தான் அவரிடம் நான் கூறினேன், உன்னைச் சுற்றி ஒரு சுவரை எழுப்பி கொள், யாரும் உள்ளே வர முடியாததை உறுதி செய், அதுதான் உன் பாதுகாப்பு இல்லம். மக்கள் உன்னைப் பற்றி பேசுவார்கள், ஆனால் அது வெளியே இருக்கட்டும். சுவற்றுக்கு உள்ளே நீ உன் வேலையில் கவனம் செலுத்து என்றேன்.

யாருக்குத் தெரியும் இது ரிஷப் பந்த்துக்கு உதவினாலும் உதவலாம். குறைந்தப்பட்சம் எனக்கு உதவியது, என்றார் ரோஹித் சர்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x