Last Updated : 02 Jan, 2020 09:12 PM

 

Published : 02 Jan 2020 09:12 PM
Last Updated : 02 Jan 2020 09:12 PM

டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாதான்: பார்த்திவ் படேல் திட்டவட்டம்

முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல், தற்போதைய ஒருநாள், டி20 விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த்திற்கு தன் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அதாவது அவர் கூறும் அறிவுரை என்னவெனில், ‘அறிவுரைகளை, கருத்துக்களை நம்பாதே, உன் ஆட்டத்தில் கவனம் செலுத்து’ ஆனால் இந்த அறிவுரையையும் சேர்த்துதான் சொல்கிறா என்பது தெரியவில்லை.

தோனியின் எழுச்சியில் பார்த்திவ் படேல் திறமை மறக்கப்பட்டது. 17 வயதில் இந்தியாவுக்காக விக்கெட் கீப்பராக இவர் செயல்பட்டார், இப்போது பந்த்திற்கு அணி நிர்வாகம் மூத்த வீரர்களிடமிருந்து கிடைத்த ஆதரவு அப்போது பார்த்திவ் படேலுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் கசப்பான விடயம்.

பார்த்திவ் படேல் கூறும்போது, “ரிஷப் பந்த் இந்தியாவுக்காக ஆடும்போது நிறைய அழுத்தங்கள் இருக்கும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கடினமான நாடுகளில் அவர் விக்கெட் கீப்பிங் செய்தார், அவை கடினமானது, ஆகவே அவர் இன்னும் நம்பிக்கை பெற்றால் சிறந்த விக்கெட் கீப்பராக உருவாக முடியும்.

பலரும் பல கருத்துகளை அறிவுரைகளை வழங்குவார்கள், அவற்றை மனதில் போட்டுக் கொள்ளாமல் பந்த் தன் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே முக்கியம்.

மேலும் அணியில் ஆதரவு இருக்கும் போது அவர் தன் பற்றிய கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை.

இந்தியாவின் சிறந்த டெஸ்ட் விக்கெட் கீப்பர் என்றால் அது விருத்திமான் சஹாதான். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கேட்ச்களை அவர் பிடிக்கும் பாணி, மற்றும் அணிக்கு அவர் கொண்டு வரும் எனர்ஜி.. எனவே அவர்தான் நம்பர் 1 விக்கெட் கீப்பர் என்பதில் ஐயமேயில்லை. அவர் உலகின் நம்பர் 1 விக்கெட் கீப்பர். உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் சஹா. தனக்கு நல்லது எது என்பதை நன்கு அறிந்தவர் சஹா” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x