Published : 02 Jan 2020 03:32 PM
Last Updated : 02 Jan 2020 03:32 PM

ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆடினாலும் ஆடாவிட்டாலும் மார்க் உட் வந்தாலும் வராவிட்டாலும் எனக்குக் கவலையில்லை: குவிண்டன் டீ காக் 

முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்த நிலையில் இங்கிலாந்து கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்க முனைந்துள்ளனர். இந்நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் உடல் தகுதி பெறுவது ஐயமாகியுள்ளது.

இதனையடுத்து ஆர்ச்சர் போலவே மணிக்கு 145 கிமீ வேகம் வீசும் மார்க் உட் இங்கிலாந்து அணியில் இடம்பெறலாம் என்று தெரிகிறது. ஆர்ச்சர் முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை 102 ரன்களுக்கு கைப்பற்றினாலும் ஓவருக்கு 6 ரன்கள் என்று விளாசப்பட்டார். ஒரு விதத்தில் இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை தோற்றதற்கு ஆர்ச்சரின் இந்தப் பந்து வீச்சும் காரணமே. ஆர்ச்சரை 3 சிக்சர்கள் விளாசி பின்னி எடுத்த குவிண்டன் டீ காக், இங்கிலாந்து அணி எந்த வீரரைக் களமிறக்கினாலும் தனக்குக் கவலையில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து தென் ஆப்பிரிக்க வீரர் குவிண்டன் டீ காக் கூறியதாவது:

“ஆர்ச்சர் ஆடினாலும் ஆடாவிட்டாலும் அவருக்கு பதில் மார்க் உட் வந்தாலும் கவலையில்லை என் அணுகுமுறையில் மாற்றமிருக்கப் போவதில்லை. மார்க் உட்டும் மணிக்கு 145 கிமீ வேகம் வீசக்கூடியவர் ஆகவே எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை.

வீரர்கள் அதீத கவனமுடன் திகழ்கின்றனர், இப்படி கூறுகையில் முன்பு கவனமாக இல்லை என்று அர்த்தம் கிடையாது. ஆனால் நம்பிக்கையில் கொஞ்சம் தளர்ந்திருந்தனர்.

முதல் டெஸ்ட் வெற்றி மீண்டும் நம்பிக்கையை திருப்பி அளித்துள்ளது. தன்னம்பிக்கை அப்படியே பறந்து கொண்டிருக்கிறது என்று கூற மாட்டேன், ஆனால் இப்போது நம்பிக்கை உயரத்தில் இருக்கிறது.

புதிய அணியின் மூலம் ஓய்வறை கேளிக்கையில் சிறந்து விளங்குகிறது, புதுப்புது கேரக்டர்கள் வந்துள்ளனர், நல்ல சூழல் நிலவுகிறது, அதனை அப்படியே களத்திற்குக் கடத்த வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x