Published : 26 Dec 2019 09:14 AM
Last Updated : 26 Dec 2019 09:14 AM

‘டெட் பால்’ சர்ச்சை, ஸ்மித் வாக்குவாதம்: 2வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 132/2

படம். | ஏ.எஃப்.பி.

75,000 ரசிகர்கள் ஸ்டேடியத்தில் குவிய மெல்போர்னில் ஆஸி.-நியூஸி. பாக்சிங் டே டெஸ்ட் திருவிழாக்கோலம் பூண்டு தொடங்கியது, ஆஸ்திரேலிய அணி சற்று முன் வரை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.

பாக்சிங் டே மெல்போர்ன் டெஸ்ட் இதற்காக 32 ஆண்டுகள் காத்திருந்தது நியூஸிலாந்து

லபுஷேன் 59 ரன்களுடனும் ஸ்மித் 30 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். போல்ட் வீசிய முதல் ஓவரின் 4வது பந்தில் பர்ன்ஸ் பவுல்டு ஆனார், வாசிம் அக்ரம் வீசும் ஃபுல் லெந்த் உள்ளே வந்த பந்து டக்கில் பவுல்டு ஆனார் பர்ன்ஸ்.

முதல் ஸ்பெல்லில் போல்ட், சவுதி பிரமாதமாக வீசினர், கிரீன் டாப் பிட்ச். பர்ன்ஸ் ஆட்டமிழந்த பிறகு லபுஷேன், வார்னருக்கு சவுதியும், போல்ட்டும் சிலபல சிரமங்களைக் கொடுத்தனர். ஆனால் வார்னர் இரண்டு பஞ்ச் டிரைவ்களில் 2 பவுண்டரிகளை அடித்தார், கொலின் டி கிராண்ட் ஹோமின் மித வேக ஸ்விங்கில் அடுத்தடுத்து இருமுறை பீட் ஆனார் வார்னர், ஆனால் அடுத்த ஓவரில் கவர் ட்ரைவ் பவுண்டரியும் விளாசினார். 41 ரன்கள் எடுத்து அபாயகரமாக திகழ்ந்த வார்னர் நீல் வாக்னரின் ஃபுல் லெந்த் லேட் ஸ்விங், வார்னர் முழு வலு ட்ரைவ் ஆட முயன்றார் எட்ஜில் பட்டு சவுதியின் ஒரு கை கேட்ச் ஆனது, மிக அருமையான கேட்ச் இது.

உணவு இடைவேளைக்கு சற்று முன் இறங்கிய ஸ்மித் 19 பந்துகளில் 1 ரன்னைத்தான் எடுத்திருந்தார். இதில் உணவு இடைவேளைக்கு கடைசி ஓவரில் சர்ச்சை எழுந்தது.

வாக்னர் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தை ஸ்மித் வேண்டுமென்றே உடலில் வாங்கிவிட்டு ஒரு ரன் எடுத்தார் ஆனால் நடுவர் டெட் பால் என்று சிக்னல் செய்தார், ரன் இல்லை. மீண்டும் அதே ஓவரில் 5வது பந்து ஸ்மித்தின் முதுகில் பட்டுச் சென்றது ரன் ஓடினார், நடுவர் மீண்டும் டெட் பால் என்றார்.

இதனையடுத்து நடுவர் நைஜல் லாங்குடன் ஸ்மித் கையை ஆட்டி ஏதோ வாக்குவாதம் புரிந்தார்.

ஆனால் கிரிக்கெட் விதிமுறை 23.2.1 என்ன கூறுகிறது எனில், வீரர் பந்தை ஆட முயற்சிக்க வேண்டும், அல்லது அடிபடாமல் தப்பிக்க பந்தைத் தவிர்ப்பதாக இருக்க வேண்டும், வேண்டுமென்றே உடலில் வாங்கி விட்டு ரன் ஓடினால் நடுவர் அதை ரன் என்று அனுமதிக்க வேண்டியதில்லை. அதனால்தான் டெட் பால் என்றனர்.

ஆனால் ஆஸ்திரேலியாவைப் பற்றித்தான் அனைவருக்கும் தெரியுமே, ஒன்று, இரண்டு ரன்களுக்கெல்லாம் நடுவரிடம் அழுவார்கள் என்பது.

உணவு இடைவேளையின் போது 67/1 என்று திணறிய ஆஸ்திரேலியா தற்போது கடைசி 10 ஒவர்களில் 46 ரன்களை எடுத்து 132/2 என்று ஆடி வருகிறது. லபுஷேன் 59 ரன்களுடனும் ஸ்மித் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சாண்ட்னர் ஒரே ஓவரில் லபுஷேன், ஸ்மித் இருவருக்கும் சிக்சர் பரிசு அளித்ததையடுத்து 3 ஓவர் 21 ரன்கள் என்று கட் செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x