Last Updated : 26 Aug, 2015 09:44 AM

 

Published : 26 Aug 2015 09:44 AM
Last Updated : 26 Aug 2015 09:44 AM

ஆஸி.க்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டுக்கு ஓய்வு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரேயொரு டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஜோ ரூட்டுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் ஜோ ரூட். ஆஷஸ் தொடரில் 460 ரன்கள் குவித்த அவர், சமீபத்திய காலங்களில் அனைத்துவிதமான போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரராக திகழ்கிறார்.

இந்த ஆண்டின் கடைசியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சவாலான டெஸ்ட் தொடர்களில் விளையாடவிருக்கிறது இங்கிலாந்து. அந்தத் தொடருக்கு ஜோ ரூட் அவசியம் தேவை என்பதாலேயே அவருக்கு இப்போது ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்குப் பிறகு ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பைக்கு முன்னதாக ஒருநாள் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட டெஸ்ட் கேப்டன் அலாஸ்டர் குக்கிற்கு இந்தத் தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. டி20, ஒருநாள் போட்டி என இரு அணிகளுக்கும் இயோன் மோர்கனே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 போட்டி வரும் 31-ம் தேதி கார்டிப்பில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 3-ம் தேதி முதல் ஒருநாள் தொடர் ஆரம்பமாகிறது.

டி20 அணி:

இயோன் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், ஸ்டீவன் ஃபின், அலெக்ஸ் ஹேல்ஸ், அடில் ரஷீத், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லே, ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லே, கிறிஸ் வோக்ஸ்.

ஒருநாள் போட்டி:

இயோன் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், ஸ்டீவன் ஃபின், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளெங்கெட், அடில் ரஷீத், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் டெய்லர், டேவிட் வில்லே, கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x