Published : 27 Oct 2019 10:30 AM
Last Updated : 27 Oct 2019 10:30 AM

கால் இறுதியில் சிந்து தோல்வி

பாரீஸ்

பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து கால் இறுதியில் போராடி தோல்வியடைந்தார்.

பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 6-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, முதல் நிலை வீராங்கனையான சீன தைபேவின் டாய் ஸூ யிங்கை எதிர்த்து விளையாடினார். சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 16-21, 26-24, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். டாஸ் ஸூ யிங்கிடம் சிந்து தோல்வியடைவது இது 10-வது முறையாகும். 15 முறை அவருக்கு எதிராக மோதியுள்ள சிந்து 5 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் உலக சாம்பியன் பட்டம் வென்ற சிந்து அதன் பிறகு எந்த தொடரையும் வெல்லவில்லை. அரை இறுதிக்கு முன்னதாகவே சிந்து வெளியேறும் தொடர்ச்சியான 4-வது தொடர் இதுவாகும்.

கடந்த மாதம் நடைபெற்ற சீன ஓபனில் முதல் சுற்றுடன் வெளியேறிய சிந்து அதற்கு முன்னதாக நடைபெற்ற கொரியா ஓபன், டென்மார்க் ஓபன் தொடர்களில் 2-வது சுற்றுடன் நடையை கட்டியிருந்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x