Last Updated : 26 Jul, 2015 11:43 AM

 

Published : 26 Jul 2015 11:43 AM
Last Updated : 26 Jul 2015 11:43 AM

இந்திய ஹாக்கிப் பயிற்சியாளராக ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் நியமனம்: ஒலிம்பிக் போட்டி வரை நீடிப்பார்

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சி யாளராக ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இந்திய அணியின் உயர் செயல்பாடு இயக்குனராக இருக்கும் ஓல்ட்மான்ஸ் அடுத்த ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி வரை பயிற்சியாளர் பதவியில் நீடிப்பார் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக இருந்த நெதர் லாந்தைச் சேர்ந்த வான் அஸ், ஹாக்கி இந்தியா தலைவர் நரீந்தர் பத்ராவுடன் ஏற்பட்ட மோதலால் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இப்போது ஓல்ட்மான்ஸுக்கு புதிய பதவி கிடைத்துள்ளது. நெதர்லாந் தைச் சேர்ந்த 61 வயதான ஓல்ட் மான்ஸ் கடந்த 3 ஆண்டுகளாக இந்திய ஹாக்கி விவகாரங்களில் பங்கெடுத்து வருவது குறிப்பிடத் தக்கது.

இந்திய விளையாட்டு ஆணைய இயக்குநர் ஜெனரல் இன்ஜேத்தி மற்றும் ஹாக்கி இந்தியா தலைவர் நரீந்தர் ஆகியோர் இணைந்து புதிய பயிற்சியாளர் நியமனம் தொடர்பாக முடிவெடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பத்ரா கூறுகை யில், “ஒலிம்பிக் போட்டி வரை பயிற்சியாளராக நீடிக்க ஓல்ட் மான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார். அதற்குப் பிறகும் அவர் பயிற்சி யாளராக நீடிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். வான் அஸ் நீக்கப்பட்டது ஏமாற்றமான அத்தியாயம். நாம் இப்போது அதிலிருந்து வெளியே வரவேண் டும். பயிற்சியாளர்கள் வருவதும், போவதும் வழக்கமானதுதான். தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு அணியை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த விரும்புகிறோம். ஓல்ட்மான்ஸுக்கு தேவையான உதவி அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது தொடர்பாக அவரிடம் ஆலோசிக்கப்படும்” என்றார்.

பெல்ஜியத்தின் அன்ட்வெர்ப் நகரில் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் அரையிறுதியின்போது வீரர் களை அழைத்துப் பேசிய பத்ராவை அங்கிருந்து வெளியேறுமாறு வான் அஸ் கூறியதைத் தொடர்ந்து அவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் சில தினங் களுக்கு முன்பு நான் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட் டேன் என வான் அஸ் பகிரங்கமாக கூறினார். ஆனால் அதை பத்ரா மறுத்தார். அதைத் தொடர்ந்து வான் அஸ் விவகாரம் தொடர்பாக முடிவெடுப்பதற்காக ஹாக்கி இந்தியாவின் சிறப்பு குழு நேற்று முன்தினம் கூடியது. அந்த குழு வான் அஸ்ஸை நீக்குமாறு பரிந் துரைத்தது. அதைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளராக ஓல்ட்மான்ஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகளுடன் ஹாக்கி இந்தியா நிர்வாகிகள் ஆலோசனை நடத்திய பிறகே வான் அஸ்ஸின் நீக்கம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x