Published : 03 Oct 2019 02:57 PM
Last Updated : 03 Oct 2019 02:57 PM

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட முத்துசாமியிடம் அவுட் ஆன விராட் கோலி; மயங்க் அகர்வால் அபார இரட்டைச் சதம்

விசாகப்பட்டிணக் கட்டாந்தரைப் பிட்சில் தென் ஆப்பிரிக்க அணி வசமாக இந்திய அணியிடம் சிக்கியுள்ளது. ரோஹித் சர்மா 23 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் தொடக்க வீரராக இறங்கிய முதல் போட்டியிலேயெ 176 ரன்கள் எடுக்க மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 371 பந்துகளில் 23 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 215 ரன்கள் எடுத்து சற்று முன் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி தன் முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 450 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. ஜடேஜா, விஹாரி ஆடி வருகின்றனர்.

ஆனால் புஜாரா இன்னொரு முறை சொதப்பி 6 ரன்களில் பிலாண்டரின் அபாரமான ஸ்விங் பந்துக்கு ஸ்டம்பை இழந்தார். சொதப்பிய இன்னொரு வீரர் விராட் கோலி, இவர் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் தமிழகத்தின் நாகப்பட்டிணத்தை பூர்வீகமாகக் கொண்ட தென் ஆப்பிரிக்க ஸ்பின்னர் சேனூரான் முத்துசாமியின் முதல் டெஸ்ட் விக்கெட்டாக வெளியேறினார்.

பிட்சில் ஒன்றுமில்லைதான் அதற்காக எந்தப் பந்தை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அடிக்கலாம் என்ற திமிர் இருந்தால் அது ஆட்டமிழப்பில் தான் முடியும் என்பதற்கு கோலி ஒரு உதாரணமானார். மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆகி லேசாக பந்து வெளியே திரும்பியது, கோலி ஆன் திசையில் பிளிக் ஆட முயன்றார். மேலும் ஒரு சோம்பேறித்தனமான ஷாட் ஆகும் இது, முன் விளிம்பில் பட்டு முத்துசாமியிடமே கேட்ச் ஆனது.

அஜிங்கிய ரஹானேவுக்கும் இந்தப் போட்டி மறக்க வேண்டியதாயிற்று அவர் 15 ரன்களில் மஹரஜின் சாதுரியமான பவுலிங் நல்ல கேப்டன்சிக்கு கவரில் பவுமாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

தொடக்க வீரர் மயங்க் அகர்வாலுக்கு இந்த டெஸ்ட் போட்டி அவரை வெளிப்படுத்திய போட்டியாகும், அவர் 204 பந்துகளில் 100 ரன்களையும் 294 பந்துகளில் 150 ரன்களையும் பிரகு 358 பந்துகளில் இரட்டைச் சதமும் எடுத்து அபாரமாக ஆடினார். கடைசியில் 215 ரன்கள்க்கு பியட் கேட்ச் எடுக்க டீன் எல்கரிடம் ஆட்டமிழந்தார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 58%, இது இரட்டைச் சதத்துக்கு ஓரளவுக்கு நல்ல ரன் விகிதமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x