Published : 02 Oct 2019 09:10 AM
Last Updated : 02 Oct 2019 09:10 AM

தரவரிசையில் பி.வி.சிந்து பின்னடைவு

புதுடெல்லி: சர்வதேச பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து சிறிய பின்னடைவை சந்தித்துள்ளார்.

உலக சாம்பியனான பி.வி.சிந்து சமீபத்தில் நடைபெற்ற சீனா ஓபன், கொரியா ஓபன் தொடர்களில் லீக் சுற்றுடன் வெளியேறியதால் தரவரிசைப் பட்டியலில் 5-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 5 மாதங்களாக 5-வது இடத்தில் இருந்து வந்த சிந்து தற்போது சிறிய அளவிலான பின்னடைவை சந்தித்துள்ளார்.

அதேவேளையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பாருபள்ளி காஷ்யப் 5 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற கொரியா ஓபன் தொடரில் காஷ்யப் அரை இறுதி வரை முன்னேற்றம் கண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாய்னா நெவால் 8-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். கிடாம்பி காந்த், சாய் பிரணீத், சமீர் வர்மா ஆகியோர் தலா ஒரு இடங்கள் முன்னேறி முறையே 9, 12, 17-வது இடங்களில் உள்ளனர். ஆடவர் இரட்டையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 12-வது இடத்தில் தொடர்கிறது. மகளிர் இரட்டையர் பிரிவு தரவரிசையில் அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி ஜோடி ஒரு இடம் முன்னேறி 19-வது இடத்தை பிடித்துள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x