Published : 27 Sep 2019 07:32 PM
Last Updated : 27 Sep 2019 07:32 PM

எய்டன் மார்க்ரம் அதிரடி சதம்; டுபிளெசிஸ் சொதப்பல்: தென் ஆப்பிரிக்கா 199/4

விஜயநகரத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கும் ரோஹித் சர்மா தலைமை கிரிக்கெட் வாரியத் தலைவர் அணிக்கும் இடையிலான 3 நாள் பயிற்சியாட்டத்தின் 2ம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கர்கள் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை எடுத்துள்ளனர்.

முதல் நாள் ஆட்டம் முற்றிலும் மழையால் கைவிடப்பட்ட, 2ம் நாளும் 50 ஓவர்களே சாத்தியமானது, இதில் மொத்த ரன் எண்ணிக்கை 199-ல் மார்க்ரம் 100 ரன்களையும் தெம்பா பவுமா 55 ரன்களையும் எடுக்க டுபிளெசிஸ் 29 பந்துகள் ஆடி எல்.பி.ஆகி வெளியேறி சொதப்பினார்.

உமேஷ் யாதவ், டீன் எல்கரை 6 ரன்களில் வெளியேற்றினார். டி புருயின் 6 ரன்களில் போரெல் பந்தில் எல்.பி.ஆக தென் ஆப்பிரிக்கா 33/2 என்று இருந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பேட்ஸ்மென் சுபைர் ஹம்சா 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 26 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஸ்பின்னர் தர்மேந்திர சிங் ஜடேஜாவிடம் எல்.பி.ஆகி வெளியேற 78/3 என்று தென் ஆப்பிரிக்கா தடுமாறியது.

ஆனால் மார்க்ரம் அதிரடியாக ஆடி சில பிரமாதமான ஷாட்களுடன் 18 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 118 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ரிட்டையர்டு ஆனார்.

டுபிளெசிஸும் 9 ரன்களில் தர்மேந்திரசிங் ஜடேஜாவிடம் எல்.பி.ஆகி வெளியேறினார்.

தெம்பா பவுமா 92 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x