Published : 26 Sep 2019 09:12 PM
Last Updated : 26 Sep 2019 09:12 PM

முதல் டெஸ்ட்: பெல்ஜியம் அணியை 2-0 என்று வீழ்த்திய இந்திய ஹாக்கி அணி - இரு அணி கோல்கீப்பர்களும் அபாரம்

மந்திப் சிங். | பிடிஐ. கோப்புப் படம்.

ஆண்ட்வெர்ப், பிடிஐ

ஆண்ட்வெர்ப்பில் நடைபெற்ற முதல் ஹாக்கி டெஸ்ட் போட்டியில் பெல்ஜியம் அணியை இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 3 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் மந்தீப் சிங் மற்றும் ஆகாஷ் தீப் சிங் ஆகியோர் கோல்களை அடித்தனர்.

முதல் பாதியில் இந்திய அணி ஆக்ரோஷமாகா ஆடியது, ஆனால் ஒரு முறை பெனால்டி கார்னர் கோல் வாய்ப்பை பெல்ஜியம் கோல் கீப்பர் வான் டோரென் தடுத்தார்.

அதே போல் பெல்ஜியம் அணிக்குக் கிடைத்த பெனால்டிகார்னர் கோல் வாய்ப்பை கிரிஷன் பதக் முறியடித்ததில் இரு அணிகளும் முதல் பாதியில் 0-0 என்று முடிந்தது.

இடைவேளைக்குப் பிறகு முதல் நிமிடத்திலேயே இந்திய அணி ஆக்ரோஷம் காட்ட அடுத்தடுத்து 2 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தும் இந்திய அணி கோல் அடிக்க முடியவில்லை.

பரிட்சார்த்த பெல்ஜியம் அணியில் 4 புதுமுக வீரர்கள் தடுப்பாட்ட வீரர்களாக நிறுத்தப்பட இந்திய முன்கள வீரர்கள் ஊடுருவ சிரமப்பட்டனர். 3வது கால் மணி நேர ஆட்டத்தில் இந்தியா ஊடுருவிச் சென்றது ஆனால் இம்முறையும் 2 கோல் வாய்ப்புகளை பெல்ஜியம் கோல் கீப்பர் வான் டோரன் தடுத்து விட்டார்.

இந்நிலையில் 39வது நிமிடத்தில் இந்திய அணியினர் உத்தியை மாற்றிக் கொண்டு சென்றதில் மந்தீப் சிங் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இறுதிக் கால் மணி நேர ஆட்டத்தில் பெல்ஜியம் வீரர்கள் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷுக்கே கடும் நெருக்கடி கொடுத்தனர், இதில் 2 கோல்கள் விழுந்திருக்கும் ஆனால் அங்கு சிறந்த கோல் கீப்பரான ஸ்ரீஜேஷ் நின்றதால் வாய்ப்புகள் தடுக்கப்பட்டன. இல்லையெனில் பெல்ஜியம் சமன் செய்திருக்கும்.

பெல்ஜியம் தாக்குதல் ஆட்டத்தை ஆடியதால் ஏற்பட்ட தடுப்பு ஓட்டைகளைப் பயன்படுத்தி இந்திய அணி இருமுறை பெல்ஜியம் பகுதிக்குள் நுழைந்து கோல் முயற்சியில் ஈடுபட மீண்டும் கோல் கீப்பர் வான் டோரன் அருமையாகத் தடுத்தார். கடைசியில் எப்படியோ முன்னேறிச் சென்ற இந்திய முன்கள வீரர்களில் ஆகாஷ்தீப் 2வது கோலை அடித்தார்.

அடுத்ததாக ஸ்பெயின் அணியை இந்திய அணி சனிக்கிழமையன்று எதிர்கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x