Published : 25 Sep 2019 04:01 PM
Last Updated : 25 Sep 2019 04:01 PM

பாகிஸ்தான் அமைப்பில் தான் நம்பியவர்கள் சொன்னது ஒன்று செய்தது வேறொன்று: மிக்கி ஆர்தர் வேதனை

பாகிஸ்தான் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட தென் ஆப்பிரிக்காவின் மிக்கி ஆர்தர் தன் பயிற்சிக்காலத்தில் நடந்தவற்றை வெளிப்படையாகப் பேசியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

“என் பயிற்சிக்காலத்தில் ஒரேயொரு பெரிய ஏமாற்றம் என்னவெனில் நான் நம்பியவர்கள் என்னிடம் சொன்னது ஒன்று செய்தது வேறொன்று என்பதுதான். நான் கிரிக்கெட் நிர்வாகப் படிமுறையைக் கூறவில்லை, கிரிக்கெட் கமிட்டியைக் கூறுகிறேன். இவர்களை நான் நம்பினேன், ஆனால் இவர்களோ சொன்னது ஒன்று செய்தது இன்னொன்றாக அமைந்தது தான் எனக்கு பெரிய ஏமாற்றமளித்தது.

எனக்கு நிச்சயமாக வாய்ப்பளித்தார்கள் அதேவேளையில் உலகக்கோப்பைக்குப் பிறகு என்னை குடைந்து எடுத்தார்கள். என்னிடம் ஏகப்பட்ட கேள்விகள் கேட்டனர். ஆனால் இந்தக் கேள்விகளெல்லாம் வெறும் அவரவர் மனத்திலிருந்து எழுந்த கருத்துகளாகவே இருந்தன.

அணித் தேர்வு உள்ளிட்டவை பற்றிய கேள்விகள் இப்போது கேட்கப்படுகின்றன, விஷயம் நடந்து முடிந்த பிறகு கேள்விகள் எழுப்புவது சுலபம். மேலும் அவர்கள் என்னிடம் கூறிய சில தகவல்களில் பல தரவு ரீதியாகத் தவறானவை என்பதே. என்னை வெளியேற்றுவதற்கான அவர்கள் கூறிய தகவல் இந்த ரகத்தைச் சேர்ந்தவை.

எது எப்படியோ 3 ஆண்டுகள் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் செலவிட்டது தனி அனுபவம்தான். என்ன இன்னும் கொஞ்ச காலம் அந்த அணியுடன் கழிக்க விரும்பினேன், காரணம் அந்த அணி 3 ஆண்டுகால உழைப்பில் நன்றாக வந்து கொண்டிருந்தது” என்றார் மிக்கி ஆர்தர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x